[X] Close

செயற்கைகோள் உதவியுடன் குவாரிகளை கண்காணிக்கலாம்: மணல் கொள்ளையை தடுக்க நீதிமன்றம் யோசனை


sand-mining

  • kamadenu
  • Posted: 07 Feb, 2019 07:59 am
  • அ+ அ-

மணல் கொள்ளையை தடுக்க செயற்கைக்கோள் உட்பட தொழில் நுட்ப உதவியுடன் அனைத்து மணல் குவாரிகளையும் கண்காணிக்க உயர் நீதிமன்றம் யோசனை தெரிவித்துள்ளது.

கரூர் மாவட்டம் தோட்டக்குறிச்சி யில் சட்டவிரோத மணல் கடத்தலை தடுக்கக் கோரி ராஜ்குமார் என்பவர் உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக் கல் செய்தார். அதில் காவிரி ஆற்றில் அள்ளப்படும் மணல் புஞ்சை புகழூ ரில் மேத்யூ நகரில் இருப்பு வைத்து வெளியூர்களுக்கு லாரிக ளில் கொண்டுச் செல்லப்படுகி றது என தெரிவித்திருந்தார்.

இந்த மனுவை விசாரித்து, சட்ட விரோதமாக மணல் குவாரியை தடுக்க நடவடிக்கை எடுக்கவும், சிறப்பு குழுக்கள் அமைத்து 24 மணி நேரம் கண்காணிக்கவும் நீதி பதிகள் உத்தரவிட்டனர். இந்த உத்தரவு அமல்படுத்தப்படாததால் அதிகாரிகளுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு மனு தாக்கல் செய்யப் பட்டது. இந்த மனு விசாரணைக்கு வந்தபோது, வேலாயுதம்பாளை யம் காவல் ஆய்வாளர் குரு நாதனை வேறு மாவட்டத்துக்கு இட மாறுதல் செய்ய நீதிபதிகள் உத்தர விட்டனர்.

இந்த மனு, நீதிபதிகள் என்.கிரு பாகரன், எஸ்.எஸ்.சுந்தர் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப் போது மனுதாரர் தரப்பில், புகைப் பட ஆதாரங்கள் தாக்கல் செய்யப் பட்டன.

அப்போது நீதிபதிகள், “சட்ட விரோத மணல் குவாரிகளை கண் காணிக்கவும், தடுக்கவும் உயர் நீதிமன்றம் பல்வேறு உத்தரவு களை பிறப்பித்துள்ளது. இருப்பி னும் மணல் கொள்ளை நடைபெற்று தான் வருகிறது” என தெரிவித்தனர். அதற்கு, சட்டவிரோத மணல் குவாரி களை கண்காணிக்கக் குழு அமைத்திருப்பதாக அரசு வழக்கறி ஞர் தெரிவித்தார்.

இதையேற்க மறுத்த நீதிபதி கள், “அதிகாரிகள் அளவில் குழு அமைத்தால் எந்த பலனும் ஏற் படாது. தொழில்நுட்ப உதவியுடன் மணல் குவாரிகளை கண்காணிக்க வேண்டும். செயற்கைக்கோள் உதவியுடன் குவாரிகளை புகைப் படம் எடுப்பது உட்பட பல்வேறு தொழில்நுட்பங்களை பயன்படுத்தி மாநிலம் முழுவதும் உள்ள மணல் குவாரிகளை கண்காணிக்க வேண்டும்.

இதற்கான சாத்தியக் கூறுகளை ஆராய நீதிமன்றத்துக்கு உதவி செய்வதற்காக சென்னை ஐஐடி இயக்குநரை நீதிமன்றம் தாமாக முன்வந்து எதிர்மனுதாரராக சேர்க் கிறது. தொழில்நுட்ப உதவிகளை பயன்படுத்தி மணல் குவாரிகளை கண்காணிப்பது தொடர்பாக அரசு பதிலளிக்க வேண்டும்” என்று உத்தரவிட்டு விசாரணையை பிப். 13-க்கு தள்ளிவைத்தனர்

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close