[X] Close

ஒரு தொகுதியில் 383 பேர் போட்டியிட்டாலும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரமே பயன்படுத்தப்படும்: வருவாய் அலுவலர் பயிற்சியில் தகவல்


parliament-elections

கோப்புப் படம்

  • kamadenu
  • Posted: 07 Feb, 2019 07:58 am
  • அ+ அ-

ஒரு நாடாளுமன்ற தொகுதியில் 383 வேட்பாளர்கள் வரை போட்டி யிட்டாலும் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களையே பயன் படுத்த வழிவகை செய்யப்பட்டு உள்ளது.

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களை கையாளுவதற்கு தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வருவாய்த் துறை அலுவலர்களுக்கு நேற்று பயிற்சி அளிக்கப்பட்டது.

இதில் கோட்டாட்சியர் சி.சுரேஷ் பேசியது: வாக்குப் பதிவு இயந்தி ரம், கன்ட்ரோல் யூனிட், வாக்குப் பதிவு சான்று இயந்திரம் (விவிபாட்) ஆகிய மூன்றையும் சேர்த்தே மின்னணு வாக்குப்பதிவு இயந்தி ரம் என அழைக்கப்படுகிறது.

ஒரு வாக்குப்பதிவு இயந்திரத் தில் 16 வேட்பாளர்களின் சின்னங் களும், பெயரும் குறிக்கப்பட்டி ருக்கும். கடந்த தேர்தலின்போது ஒரு வாக்குச்சாவடிக்கு அதிகபட்ச மாக 4 வாக்குப்பதிவு இயந்திரங் கள் வழங்கப்பட்டன. இதனால், ஒரு தொகுதியில் அதிகபட்சமாக 63 வேட்பாளர்கள் (இது தவிர நோட்டாவுக்கு ஒரு பட்டன்) போட்டி யிடலாம் என்ற நிலையும், 63 பேருக்கு மேல் போட்டியிட்டால், வாக்குச்சீட்டு முறை பின்பற்றப்பட வேண்டிய நிலையும் இருந்தன.

ஆனால், தற்போது ஒரு வாக்குச் சாவடிக்கு தேவைக்கேற்ப அதிக பட்சமாக 24 வாக்குப்பதிவு இயந்தி ரங்கள் வழங்கப்பட உள்ளன. அதன்படி, 383 வேட்பாளர்கள் வரை போட்டியிட்டாலும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களைப் பயன்படுத்தி தேர்தலை நடத்த முடியும். நாடாளுமன்றத் தேர்த லில் பரீட்சார்த்த முறையில், ஒரு தொகுதிக்கு ஒரு வாக்குச்சாவடி யில் வாக்குப்பதிவு சான்று இயந்தி ரத்தில் பதிவான சின்னங்கள் எண் ணிப் பார்க்கப்படும் என்றார்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close