[X] Close

மனைவியை கொன்று குப்பைக் கிடங்கில் வீசிய கொடூர கணவன் கைது: 15 நாட்கள் நடந்த விசாரணையில் துப்பு துலங்கியது; தனிப்படை போலீஸாருக்கு காவல் ஆணையர் பாராட்டு


perungudi-murder-report

  • kamadenu
  • Posted: 07 Feb, 2019 07:56 am
  • அ+ அ-

பெருங்குடி குப்பை கிடங்கில் பெண்ணின் கை, கால்கள் சிக்கிய சம்பவத்தில், கொலையான பெண் அடையாளம் தெரிந்துள்ளது. மனைவியை கொன்று, உடலை துண்டு துண்டாக வெட்டி குப்பை தொட்டியில் வீசிய கணவனை போலீஸார் கைது செய்துள் ளனர்.

சென்னை பள்ளிக்கரணையில் உள்ள குப்பைக் கிடங்கில் கடந்த ஜனவரி 20-ம் தேதி ஒரு பெண்ணின் வலது கை மற்றும் 2 கால்கள் கண் டெடுக்கப்பட்டன.

அந்தக் கையில் டிராகன் மற்றும் சிவன்-பார்வதி படங்கள் டாட்டூவாக வரையப்பட்டி ருந்தன. அதை வைத்து கொலை செய்யப்பட்ட பெண்ணை அடையா ளம் காணும் முயற்சியில் பள்ளிக் கரணை போலீஸார் ஈடுபட்டனர். கொலை செய்யப்பட்ட பெண் தூத்துக்குடியைச் சேர்ந்த சந்தியா என்பதும் அவரை அவரது கணவர் பாலகிருஷ்ணனே கொலை செய்து துண்டுகளாக வெட்டி வீசியதும் தெரியவந்தது.

தனிப்படை விசாரணை

இக்கொலையை விசாரிக்க பள்ளிக்கரணை காவல் நிலைய ஆய்வாளர் ஆல்பின்ராஜ் தலை மையில் தனிப்படை அமைத்து அனைத்து மாவட்டங்களிலும் விசாரணை நடத்தப்பட்டது. கைப்பற்றப்பட்ட கையில் இருந்த டிராகன், சிவன்-பார்வதி டாட்டூவை துண்டு பிரசுரங்கள், சுவரெட்டிகள் மூலம் தெரியப்படுத்தப்பட்டது. இதன்தொடர்ச்சியாக அவர் தூத் துக்குடியைச் சேர்ந்தவர் என போலீஸாருக்கு தெரியவந்தது. தொடர் விசாரணையில் தூத்துக் குடியைச் சேர்ந்த சந்தியாதான் கொலை செய்யப்பட்ட பெண் என் பதை போலீஸார் உறுதி செய்தனர்.

சந்தியாவின் சொந்த ஊர் திரு நெல்வேலி மாவட்டம் ஆரல்வாய் மொழி. அவரது கணவர் பால கிருஷ்ணன்(51). தூத்துக்குடியைச் சேர்ந்தவர். இவர்களுக்கு திருமண மாகி 20 ஆண்டுகளாகிவிட்டன. தூத்துக்குடியில் கணவருடன் சந்தியா வசித்து வந்தார். இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு கடந்த ஒரு ஆண்டாக பிரிந்து வாழ்ந்துள்ளனர். இவர்களுக்கு 12-ம் வகுப்பு படிக்கும் மகனும் 5-ம் வகுப்பு படிக்கும் மகளும் இருக்கின்றனர்.

மனைவி சந்தியா பெயரில் படத்தயாரிப்பு நிறுவனம் தொடங்கி, ‘காதல் இலவசம்’ என்ற படத்தை கடந்த 2010-ம் ஆண்டு பாலகிருஷ்ணன் இயக்கியுள்ளார். இந்த படம் தோல்வியடைந்ததால் வாய்ப்புகள் இல்லாமல் உதவி இயக்குநராக பணியாற்றி வந்துள்ளார். இதற்காக சென்னை ஜாபர்கான்பேட்டை காந்தி தெரு வில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து தனியாக இருந்துள்ளார்.

இந்த நிலையில், மனைவி சந்தியா வேறு ஒரு நபருடன் பழகு வதாக பாலகிருஷ்ணனுக்கு தக வல் கிடைத்துள்ளது. இதனால் ஆத்திரம் அடைந்த அவர், கடந்த பொங்கலுக்கு சந்தியாவை ஜாபர்கான்பேட்டை வீட்டுக்கு சம ரசம் பேச வேண்டும் எனக் கூறி வரவழைத்துள்ளார். அடுத்த 2 நாட் கள் அவர் வீட்டில் தங்கியிருந்ததை அக்கம்பக்கத்தினரும் பார்த்துள் ளனர்.

இந்தநிலையில் சந்தியாவை கொலை செய்த பாலகிருஷ்ணன், உடல் பாகங்களை துண்டுதுண்டாக வெட்டி, பிளாஸ்டிக், அரிசி பைகளில் கட்டி ஜாபர்கான்பேட்டை, எம்ஜிஆர் நகர், அடையாறு ஆற்றங்கரை பகுதிகளில் வீசியுள்ளார். இதில் அரிசி பையில் இருந்த கை மற்றும் கால்கள்தான் பெருங்குடி குப்பை கிடங்கில் கிடைத்தது.

தனிப்படை போலீஸார், ஆரல் வாய்மொழிக்குச் சென்று விசாரித் ததில் சந்தியா கணவரைப் பார்க்க சென்னை சென்ற தகவல் கிடைத் துள்ளது. இதையடுத்து ஜாபர் கான்பேட்டைக்கு விரைந்த போலீ ஸார் பாலகிருஷ்ணனை நேற்று முன்தினம் இரவில் பிடித்து விசா ரித்தனர். இதில் சந்தியாவை கொன்றதை அவர் ஒப்புக்கொண் டார். அவர் அளித்த தகவலின்பேரில், வீசப்பட்ட உடல் பாகங்கள் கைப் பற்றப்பட்டன. ஆனால் தலை மற்றும் இடது கை கிடைக்கவில்லை. அதனை போலீஸார் தேடி வரு கின்றனர்.

பாலகிருஷ்ணனை கைது செய்து அவரது வீட்டுக்கு அழைத்து வந்து கொலை நடந்தது எப்படி என நடித்துக் காட்டச் செய்து வீடியோவில் பதிந்தனர். ‘கொலை நடந்ததற்கான எந்த அடையாளமும் வீட்டில் இல்லை. ரத்தக்கரைகூட இல்லை. உடலை அறுக்க பயன்படுத்திய மரம் அறுக்கும் மின்சார இயந்திரத்தை கைப்பற்றியுள்ளோம்’ என்று போலீஸார் தெரிவித்துள்ளனர். குற்றவாளியை கண்டறிந்த தனிப் படை போலீஸாரை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் ஏ.கே.விஸ்வநாதன் பாராட்டினார்.

சந்தேகத்தால் சித்ரவதை

சந்தியாவின் தாய் மற்றும் தங்கை சஜிதா சென்னையில் செய்தியாளர் களிடம் கூறும்போது, “சந்தியாவின் நடத்தையில் சந்தேகப்பட்டு அவ ருக்கு 8 முறை மொட்டை அடித்து பாலகிருஷ்ணன் சித்ரவதை செய் துள்ளார். சந்தியா அனைவரிடமும் சகஜமாக பேசுவார். அவர் தவறான பெண் அல்ல. கணவர் அடித்து துன்புறுத்துவதாக அடிக்கடி அழுவார். பணம் வாங்கிச் சென்று கொடுப்பார். இதன் பின்னர் விவாகரத்துக்கு விண்ணப்பித்தார். இந்தச் சூழலில்தான் அவர் கொல்லப்பட்டுள்ளார். நாங்கள் போன் செய்யும்போதெல்லாம் பாலகிருஷ்ணனே பேசினார். சந்தியா விரைவில் வெளிநாடு செல் லப்போவதாகக் கூறினார். இந் நிலையில், சந்தியாவை காண வில்லை என்று தூத்துக்குடியில் புகார் கொடுத்திருக்கிறார். இதன் பேரில் போலீஸ் வந்து விசாரித்த போதுதான் அவர், கையில் இருந்த டாட்டூ குறித்து தெரிவித்தோம். அதை வைத்துதான் சந்தியா கொலை செய்யப்பட்டதை போலீ ஸார் கண்டுபிடித்துள்ளனர்” என் றனர்.

இதனிடையே, பாலகிருஷ் ணனின் தம்பி சீனிவாசன், ‘எனது சகோதரர் கொலை செய்திருக்க வாய்ப்பில்லை’ என தூத்துக் குடியில் பேட்டியளித்துள்ளார்.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close