[X] Close

ஒரு தொகுதி முழுக்க.. ஒரு மாவட்டம் முழுக்க பேசினாலும் ஸ்டாலின் பேச்சைக் கேட்க யாருமில்லை: அமைச்சர் உதய குமார் கிண்டல்


stalin-dmk-admk-minister-udayakumar

  • முத்துக்குமார்
  • Posted: 06 Feb, 2019 21:29 pm
  • அ+ அ-

மதுரை மாவட்டத்தில் உள்ள கிராமம் ஒன்றில் சைக்கிள் பேரணியைத் தொடங்கி வைத்த அமைச்சர் உதயகுமார், ஸ்டாலின் மீது கடும் கிண்டல் விமர்சனங்களை முன்வைத்தார்.

அப்போது அவர் திமுக தலைவர் ஸ்டாலிலைக் கிண்டல் செய்து விமர்சித்துப் பேசினார்.

“மாவட்டவாரியாக பொதுக்கூட்டம் நடத்தாமல் கிராமம் கிராமமாகச் செல்வது ஏன்? மாவட்டம் மாவட்டமாகப் போனால் கூட்டம் சேர்வதில்லை.  ஒரு தொகுதி முழுக்க, ஒரு மாவட்டம் முழுக்க பேசினாலும் இவர்கள் பேச்சை கேட்க ஆட்கள் இருப்பதில்லை. 

இப்போது கிராமத்தில் போய் குத்தவச்சு பேசினா கேப்பாங்களா? நீங்கள் குத்த வச்சு பேசினாலும் சரி, நின்னுகிட்டு பேசினாலும் சரி, தலைகீழாக நின்று பேசினாலும் சரி இந்தத் தமிழ்நாட்டு மக்கள் உங்களை நம்புவதற்கு தயாராக இல்லை என்பதுதான் இன்றைக்கு நிதர்சனமான உண்மை. 

நீங்க மாவட்டம் மாவட்டமா போக வேண்டியதுதானே என் ஊராட்சி ஊராட்சியாப் போயி கூட்டம் போடுறீங்க?” என்று கிண்டலாக விமர்சனம் செய்தார்.

வாக்களிக்கலாம் வாங்க

'லிசா உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close