[X] Close

காமராஜர் காலத்திலிருந்து கட்சிக்கு பாடுபடுபவர் அழகிரி: ஈவிகேஎஸ் இளங்கோவன் பாராட்டு


evks-ilangovan-interview

  • kamadenu
  • Posted: 06 Feb, 2019 11:00 am
  • அ+ அ-

காமராஜர் காலத்திலிருந்து காங்கிரஸ் கட்சிக்காக பாடுபட்டு வரும் மூத்த தலைவர் கே.எஸ்.அழகிரி தமிழக காங்கிரஸ் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டது வரவேற்புக்குரியது என ஈவிகேஎஸ் இளங்கோவன் தெரிவித்தார்.

ஈரோடு முனிசிபல் காலனியில் அமைக்கப்பட்டுள்ள திமுக தலைவர் கருணாநிதியின் சிலைக்கு தமிழக காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் நேற்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:கருணாநிதி சிலைக்கு மாலை அணிவித்தது மகிழ்ச்சியாக உள்ளது. தமிழகத்தில் இன்றும் அவரது புகழ் நிலைத்து உள்ளது. மக்களவைத் தேர்தலைப் பொறுத்தவரை, தமிழகத்தில் திமுக-காங்கிரஸ் கூட்டணி வலுவாக உள்ளது. தமிழகம் புதுச்சேரி என மொத்தம் 40 தொகுதிகளிலும் இந்த கூட்டணி வெற்றி பெறுவது உறுதியாகிவிட்டது.

அதிமுக, பாஜகவோடு கூட்டணியாக நின்றாலும், தனித்து நின்றாலும் அவர்கள் வைப்புத்தொகை கூட பெற முடியாமல் தோற்பது உறுதியாகியுள்ளது. பிரதமர் மோடி கொங்கு மண்டலத்தில் எங்கு பொதுக்கூட்டம் நடத்தினாலும், அதற்கு பலன் கிடைக்காது. இங்கு திமுக - காங்கிரஸ் கூட்டணி உறுதி செய்யப்பட்டு விட்டது.

தமிழக காங்கிரஸ் தலைவராக அழகிரி தேர்ந்தெடுக்கப்பட்டதை நான் வரவேற்கிறேன். அவர் மூத்த தலைவர். காமராஜர் காலத்திலிருந்து காங்கிரஸ் கட்சிக்காக பாடுபட்டு வருகிறார். திருநாவுக்கரசர் பற்றி பேசுவதற்கு ஒன்றுமில்லை. நான் இரண்டு ஆண்டு காலம் தமிழக காங்கிரஸ் தலைவராக இருந்தது சாதனை என்று அவரே கூறியுள்ளார்,என்றார்.

இந்நிகழ்வில் திமுக தெற்கு மாவட்ட செயலாளர் சு.முத்துசாமி, ஈரோடு மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஈ பி ரவி, துணைத் தலைவர் ராஜேஷ் ராஜப்பா, சிறுபான்மை பிரிவு துணைத் தலைவர் பாஷா உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

வாக்களிக்கலாம் வாங்க

'லிசா உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close