[X] Close

குற்றாலத்தில் திருப்பூர் மாணவர் மர்ம மரணம்; உடனிருந்த மாணவிக்கு பாலியல் தொல்லை: விடுதி மேலாளர் உட்பட 2 பேர் கைது


kutralam-suicide

  • kamadenu
  • Posted: 06 Feb, 2019 09:40 am
  • அ+ அ-

குற்றாலம்

திருப்பூர் மாணவர் மர்மமான முறையில் குற்றாலம் விடுதியில் இறந்த சம்பவத்தில், அவருடன் தங்கியிருந்த மாணவியை மிரட்டி பாலியல் தொல்லை அளித்ததாக விடுதி மேலாளர் உட்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

திருப்பூர் மாவட்டம் குட்டகம் கிராமத்தை சேர்ந்தவர் ராஜ்குமார். இவரது மகன் கார்த்திக் ராஜா (19). இவர் கோபிசெட்டிபாளையத்தில் உள்ள பாலிடெக்னிக்கில் படித்து வந்தார். பாலிடெக்னிக் கல்லூரிக்கு செல்லும்போது, கோபிசெட்டி பாளையத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவியை காதலித்து வந்தார்.

கடந்த சில நாட்களுக்கு முன் இவர்கள் இருவரும் வீட்டை விட்டு வெளியே வந்துள்ளனர். குற்றாலம் வந்த அவர்கள், விடுதி யில் வாடகைக்கு அறை எடுத்து தங்கினர். 2 நாட்களுக்கு முன் விடுதி அறையில் கார்த்திக் ராஜா சடலமாக கிடந்தார். குற்றாலம் போலீஸார் விசாரணை நடத்தினர்.

மாணவியிடம் நடத்திய விசார ணையில், கார்த்திக் ராஜா மது அருந்திவிட்டு, தனிமையில் இருந் ததை செல்போன் மூலம் படம் எடுத்ததாகவும், இதை கண்டித்த தால், அவர் தூக்கிட்டு தற் கொலை செய்து கொண்டதாகவும் கூறியுள்ளார். மேலும், இது தொடர் பாக விடுதி ஊழியர்களிடம் கூறிய போது, அவர்கள் உதவி செய்வதாக கூறி, தனக்கு பாலியல் தொல்லை அளித்ததாகவும் கூறியுள்ளார்.

இதையடுத்து, விடுதி மேலாளர் ஜலால்(65), உதவியாளர் கருப்ப சாமி(45) ஆகியோரை குற்றாலம் போலீஸார் கைது செய்தனர்.

வாக்களிக்கலாம் வாங்க

'கேம் ஓவர் ' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close