[X] Close

சிவகங்கை மக்களவைத் தொகுதியில் மீண்டும் களமிறங்குகிறார் கார்த்தி சிதம்பரம்: தேர்தல் பணிகளில் காங்கிரஸார் தீவிரம்


karthick-chidambaram-contest

  • kamadenu
  • Posted: 06 Feb, 2019 07:08 am
  • அ+ அ-

சிவகங்கை மக்களவைத் தொகுதி யில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் போட்டியிட உள்ளதாக வும், அதற்கான தேர்தல் பணிகள் அவரது ஆலோசனையில் தீவிர மாக நடைபெற்று வருவதாகவும் அக்கட்சியினர் கூறுகின்றனர்.

கடந்த 2004-ம் ஆண்டு வரை இருந்த புதுக்கோட்டை மக்கள வைத் தொகுதி, அதன்பிறகு மேற்கொள்ளப்பட்ட தொகுதி மறு சீரமைப்பினால் நீக்கப்பட்டது. இதையடுத்து, புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 6 சட்டப் பேரவைத் தொகுதிகளில் ஆலங்குடி, திருமயம் தொகுதிகள் சிவகங்கை மக்களவைத் தொகுதி யுடன் இணைக்கப்பட்டன.

மறு சீரமைக்குப் பிறகு 2009-ல் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் இடம்பெற்றிருந்த காங்கிரஸ் கட்சியின் சார்பில் சிவகங்கை தொகுதியில் போட்டியிட்ட ப.சிதம்பரம் வெற்றி பெற்று மத்திய அமைச்சரானார்.

அதன் பிறகு, 2014-ல் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் தனித்துப் போட்டியிட்டது. அதில், அதிமுக சார்பில் போட்டியிட்ட பி.ஆர்.செந்தில்நாதன் வெற்றி பெற்றார். காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்ட கார்த்தி சிதம்பரம் 4-வது இடத்தைப் பிடித்தார்.

இந்நிலையில், சிவகங்கை மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் சார் பில் கார்த்தி சிதம்பரம் மீண்டும் போட்டியிட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அவரது ஆலோசனையின்படி, இத் தொகுதிக்குட்பட்ட திருமயம், ஆலங்குடி சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் காங்கிரஸ் கட்சியினர் தேர்தல் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

இதுகுறித்து கட்சியின் மூத்த நிர்வாகி ஒருவர் கூறியது:

தேர்தலுக்கான முன்னேற்பாடு பணிகளை தெற்கு மாவட்டத் தலைவர் தர்ம.தங்கவேல் கவனித்துவருகிறார். பலமான கூட்டணியைக் கொண்டு தேர்தலைச் சந்தித்து, கடினமாக உழைத்து வெற்றி பெறுவோம் என்றார்.

வாக்களிக்கலாம் வாங்க

'லிசா உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close