[X] Close

மக்களவைத் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் யாருடன் கூட்டணி? - விரைவில் அறிவிக்கப்படும் என கமல்ஹாசன் தகவல்


mnm-contest-in-election

பொள்ளாச்சியில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் பேசும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன், துணைத் தலைவர் மகேந்திரன், செயலாளர் அருணாச்சலம் ஆகியோர் | படம். எஸ்.கோபு

  • kamadenu
  • Posted: 06 Feb, 2019 07:06 am
  • அ+ அ-

மக்களவைத் தேர்தலில் யாருடன் கூட்டணி என்பது குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என தேமுதிகவும், மக்கள் நீதி மய்யம் கட்சியும் அறிவித்துள்ளன.

மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தேர்தலுக்கான முன்தயாரிப்பு பணிகள் மற்றும் கூட்டணி அமைப்பது குறித்து அனைத்துக் கட்சிகளும் தீவிரமாக ஆலோசனை நடத்தி வருகின்றன. அதிமுக, திமுக தலைமையில் எந்தெந்த கட்சிகள் அணிவகுக்கும் என்பது விரைவில் தெரியவரும்.

இந்நிலையில் முதல் தேர்தலை சந்திக்கும் மக்கள் நீதி மய்யம் கட்சியும் தற்போது தேர்தல் வேலைகளை தொடங்கியுள்ளது. அக்கட்சியின் தலைவர் கமல் ஹாசன் தலைமையில் 11 மக்கள வைத் தொகுதிகளை உள்ளடக்கிய மேற்கு மண்டல தொகுதி பொறுப் பாளர்களுக்கான மதிப்பாய்வுக் கூட்டம் நேற்று பொள்ளாச்சியில் நடந்தது. இதில் மாவட்ட மற்றும் பகுதி பொறுப்பாளர்கள் பங்கேற்ற னர். பின்னர் செய்தியாளர்களிடம் கமல் ஹாசன் கூறியதாவது:

நாடாளுமன்ற தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சி வேட் பாளர்களை நிறுத்தும்போது அதன் வலிமை தெரியும். தேர்தல் தொடர்பான கருத்துக்கணிப்புகள் மீது எனக்கு நம்பிக்கையில்லை.

தற்போது நடைபெற்று வரும் மத்திய ஆட்சியால் மாநில அரசுக்கு எந்தவிதமான பயனு மில்லை. புயலுக்கு கூட இந்த மத்திய அரசு உதவவில்லை. மேற்கு வங்காளத்தில் மம்தா பானர்ஜி நடத்தி வருவது உரிமை போராட் டம். தமிழகத்தையும் மேற்கு வங் காளத்தையும் ஒப்பிட முடியாது. இரண்டையும் ஒப்பிட்டு மம்தா பானர்ஜியை அசிங்கப்படுத்த வேண்டாம். மத்தியில் ஆள்பவர் கள் எல்லா இடத்தையும் ஒன்று போல் நினைக்க வேண்டும்.

காங்கிரசுடன் கூட்டணி வைப்பது என்று கூறுவதெல்லாம் தகவல் மட்டுமே. அவர்களும் அழைக்கவில்லை. நாங்களும் பேசவில்லை. எனக்கு தமிழகமும் தமிழக மக்களும்தான் முக்கியம். கூட்டணி குறித்து முடிவு செய்யும் அதிகாரம் எனக்கு கொடுக்கப்பட்டுள்ளது. கூட்டணி பேச்சுவார்த்தை நடந்து கொண்டு இருக்கின்றது. இன்னமும் முடிவு செய்யவில்லை. விரைவில் கூட் டணி குறித்து அதிகார பூர்வமாக அறிவிப்போம்.

நான் ஏற்கெனவே ஒருமித்த கருத்துடையவர்களுடன் கூட்டணி என்றும் சொல்லியிருக்கிறேன். கூட்டணி குறித்து அறிவிக்க காலகட்டம் வரும். தேர்தலில், முடிந்தால் தனித்து நிற்போம். இவ்வாறு அவர் கூறினார்.

தேமுதிக

தேமுதிக எந்தெந்த கட்சிகளு டன் கூட்டணி அமைக்கும் என்பது பற்றி பிப்ரவரி இறுதியில் அறிவிக் கப்படும் என அக்கட்சியின் துணைச் செயலாளர் எல்.கே.சுதீஷ் தெரிவித்துள்ளார்.

சென்னை தேனாம்பேட்டையில் நேற்று நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற அவர் செய்தியாளர் களிடம் பேசும்போது, ‘‘வரும் மக்களவைத் தேர்தல் கூட்டணி தொடர்பாக இரண்டு, மூன்று கட்சிகளுடன் பேசி வருகிறோம். கூட்டணி பேச்சு உள்ளிட்ட அரசியல் நிகழ்வுகளை தேமுதிக தலைவர் விஜயகாந்திடம் உடனுக் குடன் தெரிவித்து வருகிறோம். தேமுதிக இடம்பெறும் கூட்ட ணியே வலிமையான, வெற்றி கூட்டணியாக இருக்கும். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதும் விஜய காந்தின் பிரச்சாரத் திட்டத்தை முடிவு செய்வோம். யாருடன் கூட்டணி என்பதை இம்மாத இறுதி யில் அறிவிப்போம்'' என்றார்.

தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நலக் குறைவு காரணமாக அமெரிக்காவில் தங்கி சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் கூட்டணி தொடர்பாக பேச்சு நடத்தி வருவதாக எல்.கே.சுதீஷ் கூறியிருக்கிறார்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close