[X] Close

ஆட்சி மாற்றத்துக்கு மக்களை தயார்படுத்துங்கள் திமுக வாக்குச்சாவடி முகவர்களுக்கு ஸ்டாலின் அறிவுறுத்தல்


prepare-people-for-regime-change

மதுரையில் நடந்த திமுக வாக்குச்சாவடி முகவர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் பேசினார் அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின். படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி

  • kamadenu
  • Posted: 05 Feb, 2019 15:40 pm
  • அ+ அ-

ஆட்சி மாற்றத்துக்கு மக்களை தயார்படுத்துங்கள் என்று மதுரையில் நடந்த வாக்குச்சாவடி முகவர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் கட்சியினருக்கு திமுக தலைவர் ஸ்டாலின் அறிவுறுத்தினார்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், மாவட்டம் வாரியாக ஊராட்சி சபைக் கூட்டத்திலும், கட்சியின் வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டத்திலும் பங்கேற்று வருகிறார். அதன்படி நேற்று காலை திருநகர் அருகே தனக்கன்குளத்தில் நடைபெற்ற ஊராட்சி சபைக் கூட் டத்தில் பங்கேற்றார். பின்னர், திருப்பரங்குன்றம் தொகுதிக்கு உட்பட்ட கூத்தியார் குண்டில் திமுக வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டார். கூட்டத்தில் அவர் பேசியதாவது:கட்சியினரை ஊக்கப்படுத்தவே நிர்வாகிகளை சந்தித்து வருகிறேன். பொதுமக்களின் பிரச்சினைகளை அறியவே ஊராட்சி சபைக் கூட்டங்களை நடத்தி வருகிறேன். நான் நடத்தும் ஊராட்சி சபைக் கூட்டத்தில் மக்கள் அதிக அளவில் பங்கேற்பதைப் பார்த்து மற்ற கட்சியினர் பொறாமைப்படுகின்றனர்.

தற்போது தமிழக மக்களுக்கு திமுக மீது முழு திருப்தியும், நம்பிக்கையும் ஏற்பட்டுள்ளதாக அறிகிறேன். அதை வாக்குகளாக மாற்றுவது கட்சியினர் கையில்தான் உள்ளது. தமிழகத்தில் நடை பெறும் அடிமை ஆட்சியை அப்புறப்படுத்த வேண்டும். வரும் மக்களவைத் தேர்தலில் மத்திய பாஜக அரசையும் அகற்ற வேண்டும். இதை மனதில் வைத்து கட்சியினர் தேர்தல் பணியை தொடங்க வேண்டும். ஆட்சி மாற்றத்துக்கு மக்களை தயார்படுத்த வேண்டிய பொறுப்பு திமுகவினருக்கு உள்ளது. மக் களை வாக்குச்சாவடிகளுக்கு அழைத்து வந்து திமுகவுக்கு வாக்களிக்க வேண்டிய கடமை முகவர்களுக்கு உள்ளது.

கருணாநிதி ஆற்றிய பணிகளை தமிழகத்தில் இனி யாராலும் செய்ய முடியாது. அவர் விட்டுச் சென்ற பணிகளை மேற்கொள்ளவே நான், திமுக தலைவர் பொறுப்பை ஏற்றுக் கொண்டுள்ளேன். இவ்வாறு அவர் பேசினார். கூட்டத்தில், திமுக மாவட்ட செயலாளர்கள் பி.மூர்த்தி எம்.எல்.ஏ, கோ.தளபதி, மணிமாறன், முன்னாள் சபாநாயகர் சேடபட்டி முத்தையா, கம்பம் செல்வேந்திரன், மாவட்ட இளை ஞரணி செயலாளர் பாலாஜி, மருத்துவர் சரவணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

‘வருகை பதிவு’ எடுத்த ஸ்டாலின்

திருப்பரங்குன்றம் சட்டப்பேரவைத் தொகுதிக்கு உட்பட்ட வாக்குச்சாவடிகளில் திமுக சார்பில் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட முகவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் நேற்று ஸ்டாலின் தலைமையிலான கூட்டத்தில் பங்கேற்றனர். அவர்கள் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து ஸ்டாலின் விளக்கிக் கூறினார். முன்னதாக கூட்டம் தொடங்குவதற்கு முன், அனைவரும் வந்துள்ளனரா என்பதை அறிய வருகைப் பதிவேட்டை ஸ்டாலின் ஆய்வு செய்தார். அப்போது வாக்குச்சாவடி வாரியாக சில முகவர்கள் பெயர்களை குறிப்பிட்டு எழுந்து கையை தூக்கச் சொன்னார். ஸ்டாலின் ஒவ்வொருவரின் பெயரை சொல்லச் சொல்ல அவர்கள் எழுந்து நின்று வருகையை உறுதி செய்து விட்டு அமர்ந்தனர்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close