[X] Close

காய்ந்த கரும்புகளுடன் ஆட்சியர் அலுவலகத்துக்கு மனு அளிக்க வந்த விவசாயி


dried-cane

காய்ந்த கரும்புகளுடன் மனு அளிக்க வந்த விவசாயி.

  • kamadenu
  • Posted: 05 Feb, 2019 15:14 pm
  • அ+ அ-

திருத்தணி கூட்டுறவு சர்க்கரை ஆலை அதிகாரிகள் கரும்பு வெட்ட அனுமதி மறுப்பதால் கரும்பு காய்வதாக ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயி முறையிட்டார்.

வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காய்ந்த கரும்புடன் அரக்கோணத்தைச் சேர்ந்த விவசாயி ஏழுமலை மனு அளிக்க வந்தார். அவரிடம், வேளாண் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். மேலும், நேரில் சென்று ஆய்வு செய்வதாகக் கூறி அவரை அனுப்பி வைத்தனர்.

அவர் அளித்த மனுவில், ‘‘அரக்கோணம் அடுத்த வேடல் கிராமத் தில் 6 ஏக்கரில் கரும்பு பயிரிட்டுள்ளேன். இதில், 2 ஏக்கர் கரும்பு கடுமையான வெயி லின் காரணமாக வாடி விட்டது. இது தொடர் பாக திருத்தணி கூட் டுறவு சர்க்கரை ஆலைக்கு தகவல் தெரிவித்தேன். அவர் கள், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

கடந்த நவம்பர், டிசம்பர் மாத பருவத்தில் வெட்ட வேண்டிய கரும்பு இதுவரை வெட்டாமல் கிடப்பில் வைத்துள்ளனர். கரும்பு வெட்டுவதற்கான அனுமதி அளிக்காமல் இருப்பதால் இதற்கு ஏற்படும் இழப்பையும் திருத்தணி கூட்டுறவு சர்க்கரை ஆலை அதிகாரிகளே பொறுப்பேற்க வேண்டும். கரும்பு பயிருக்காக அரக்கோணத்தில் உள்ள தேசிய உடமையாக்கப்பட்ட ஒரு வங்கியில் ரூ.1.90 லட்சம் கடன் வாங்கியுள்ளேன். இந்தக் கடனை தற்போது செலுத்த முடியாத நிலையில் உள்ளேன். எனவே, சேதமடைந்த கரும்புக்கு நிவாரணம் வழங்க வேண்டும். மீதமுள்ள 4 ஏக்கர் கரும்பை வெட்ட உடனடியாக அனுமதி அளிக்க வேண்டும்’’ என்று தெரிவித்துள்ளார்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close