ரஜினி, விஜய்க்கு சீமான் நன்றி!


சென்னை: மாநில கட்சியாக அங்கீகாரம் பெற்றுள்ள நாம் தமிழர் கட்சிக்கு வாழ்த்து தெரிவித்த நடிகர் ரஜினிகாந்த், தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்க்கு அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் நன்றி தெரிவித்துள்ளார்.

மக்களவை தேர்தலில் நாம் தமிழர் கட்சி 8.19 சதவீத வாக்குகளை பெற்று தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட மாநில கட்சி என்ற அந்தஸ்தை பெற்றது. இதையொட்டி பல்வேறு கட்சி தலைவர்கள் நாம் தமிழர் கட்சியினருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இதுகுறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று வெளியிட்ட சமூக வலைதள பதிவில், ‘நாம் தமிழர் கட்சி அங்கீகாரம் பெற்றதற்கு வாழ்த்து தெரிவித்த நடிகர் ரஜினிகாந்துக்கு என் நன்றி. உளமார பாராட்டி வாழ்த்து தெரிவித்த தம்பி விஜய்க்கும், அண்ணன் ஜான் பாண்டியனுக்கும் நன்றி’ என்று தெரிவித்துள்ளார்.