[X] Close

தமிழகத்தில் பாஜக கதவுகள் கூட்டணிக்காக திறந்தே உள்ளன: தேசிய பொது செயலாளர் முரளிதரராவ் தகவல்


bjp-doors-are-open-for-coalition

  • kamadenu
  • Posted: 05 Feb, 2019 12:56 pm
  • அ+ அ-

தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் கூட்டணிக்காக பாஜகவின் கதவுகள் திறந்தே இருப்பதாக அக்கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் முரளிதரராவ் தெரிவித்தார்.

கோவையில் நேற்று செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: மக்களவைத் தேர்தலை தமிழகத்தில் எதிர்கொள்ள பாஜக தீவிரமாக தயாராகி வருகிறது. அதற்காக, கடந்த நான்கரை ஆண்டுகளில் மத்திய அரசு நிகழ்த்திய சாதனைகளை மக்களிடம் கொண்டு சேர்ப்பதற்காக 4 விதமான பிரச்சாரங்களை மேற்கொள்ள உள்ளோம்.

தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் கூட்டணியைப் பொறுத்தவரை பாஜகவின் கதவுகள் திறந்தே இருக்கின்றன. இதற்கு முன்பு தமிழகத்தில் பல்வேறு கட்சிகளுடன் கூட்டணி வைத்து தேர்தலை சந்தித்துள்ளோம். தற்போது கூட்டணிக்கான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன. பாஜக எப்போதும் ஊழலை எதிர்த்து வருகிறது. 2014 தேர்தலுக்குப் பிறகு, மற்ற மாநிலங்களைக் காட்டிலும் தமிழகத்தில் பாஜக வளர்ந்து வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

உரிய நேரத்தில் பதில்

‘ஊழலை ஒழிப்போம்' என கூறிவிட்டு அதிமுகவுடன் எப்படி நீங்கள் கூட்டணி வைக்க முடியும்? என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, ‘அதிமுகவுடன் கூட்டணி வைத்தால் இதுகுறித்து அப்போது பதில் சொல்கிறோம்’ என்றார் முரளிதரராவ்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close