மேட்டூர் அணை நீர்மட்டம் 44.17 அடியாக சரிவு


மேட்டூர்/தருமபுரி: மேட்டூர் அணையின் நீர்மட்டம் நேற்று 44.17 அடியாக சரிந்துள்ளது.

சேலம் மாவட்டத்தில் உள்ள மேட்டூர் அணைக்கு நேற்று முன்தினம் காலை விநாடிக்கு 853 கனஅடியாக இருந்த நீர்வரத்து, நேற்று காலை விநாடிக்கு 656 கனஅடியாக குறைந்தது. குடிநீர் தேவைக்காக மேட்டூர் அணையில் இருந்து விநாடிக்கு 2,100 கனஅடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. நீர்வரத்தை விட தண்ணீர் திறப்பு அதிகமாக இருப்பதால், அணையின் நீர்மட்டம் வேகமாக சரிந்து வருகிறது. நேற்று மேட்டூர் அணையின் நீர்மட்டம் 44.17 அடியாகவும், நீர் இருப்பு 14.33 டிஎம்சியாகவும் இருந்தது.

தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நேற்று முன்தினம் காலை 8 மணி அளவீட்டின்போது நீர்வரத்து விநாடிக்கு 3,000 கனஅடியாக இருந்தது. இந்நிலையில் நேற்று காலை 6 மணி நிலவரப்படி நீர்வரத்து விநாடிக்கு 1,500 கனஅடியாக குறைந்தது. காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதியில் மழை குறைந்ததால் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து சரிந்துள்ளது.