[X] Close

பெண்கள் பாதுகாப்புக்காக தொடங்கப்பட்ட ‘181' சேவை மைய கட்டமைப்பை விரிவுப்படுத்த அரசு முடிவு


181-service-for-women-protection

  • kamadenu
  • Posted: 05 Feb, 2019 11:27 am
  • அ+ அ-

பெண்கள் பாதுகாப்புக்காக தொடங்கப்பட்ட 181 சேவை மையத்தின் கட்டமைப்பை விரிவுப்படுத்த சமூக நலத்துறை முடிவு செய்துள்ளது.

பெண்களின் பாதுகாப்புக்காக மத்திய அரசு அறிமுகப்படுத்திய 181 இலவச தொலைபேசி சேவை தமிழகத்துக்கு விரிவுப்படுத்தப்பட்டது. சென்னை அம்பத்தூரில் உள்ள அம்மா கால் சென்டர் மையத்தின் ஒரு பகுதியில் 181 இலவச தொலை பேசி எண்ணுக்கான மையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மையத்தை நிர்வகிக்க 5 வழக்கறிஞர்கள், 5 மன நல ஆலோசகர்கள், ஒரு தகவல் தொழில் நுட்ப வல்லுநர் பணியமர்த்தப் பட்டுள்ளார்.

இந்த மையத்துடன் காவல்துறை, மருத்துவம், சட்ட உதவிகள், கவுன்சிலிங் ஆகியவை ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன. இந்த சேவை மையத்தை, கணவன் மது அருந்துவிட்டு அடிப்பது, கணவர் குழந்தைகள், மனைவியுடன் நேரம் ஒதுக்கு வதில்லை, பெற்றோரை மகன் அல்லது மகள் கவனிப்பதில்லை உட்பட குடும்ப வன்முறையால் மனரீதியாகவும், உடல்ரீதியாக வும் தாங்கள் சந்திக்கும் பாதிப் புகள், கவுன்சிலிங் பெறுவது, அரசின் நலத்திட்டங்கள் பற்றிய தகவல்களை அறிவது குறித்து அணுகலாம். நாளுக்கு நாள் இந்த மையத்தை தொடர்பு கொள்ளும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் அழைப்புகளை விரை வாக எடுத்து உதவிகளை வழங்க பணியாளர்களை கூடுத லாக நியமிப்பது உள்ளிட்ட கட்ட மைப்புகளை விரிவுப்படுத்த சமூக நலத்துறை முடிவு செய் துள்ளது.

இதுதொடர்பாக, சமூக நலத் துறை அதிகாரி ஒருவர் கூறிய தாவது : பெண்களின் பாதுகாப்புகாக தொடங்கப்பட்ட 181 தொலைபேசி சேவை சிறப்பான முறையில் செயல்பட்டு வருகிறது. பெண்கள் மத்தியில் அதிக அளவில் விழிப்புணர்வு ஏற்பட்டு தொலை பேசி அழைப்புகள் அதிகமாக வருகின்றன. வரும் அழைப்புகளுக்கு உட னடியாக பேசி தீர்வு அளித்து வருகிறோம். இருப்பினும், இன்னும் அதி வேகத்தில் அழைப்புகளை எடுத்து பிரச்சினைக்கு தீர்வு காண, பணியாளர்களை அதிகப் படுத்துவது உள்ளிட்ட கட்டமைப் புகளை விரிவுப்படுத்த ஆலோசித்து வருகிறோம். விரைவில் இந்த பணிகள் செயல் வடிவம் பெறும். இவ்வாறு அவர் கூறினார்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close