[X] Close

மக்களவைத் தேர்தலையொட்டி  அதிமுகவில் விருப்ப மனு விநியோகம் தொடங்கியது


admk-maanu

அதிமுகவில் விருப்ப மனு விநியோகத்தை சென்னையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங் கிணைப்பாளர் கே.பழனிசாமி ஆகியோர் நேற்று தொடங்கி வைத்தனர். உடன் கட்சி நிர்வாகிகள் | படம்: ம.பிரபு

  • kamadenu
  • Posted: 05 Feb, 2019 08:19 am
  • அ+ அ-

அதிமுகவில் விருப்ப மனு விநியோ கத்தை கட்சியின் ஒருங்கிணைப் பாளர்கள் ஓ.பன்னீர்செல்வம், கே.பழனிசாமி ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

மக்களவை பொதுத்தேர்தல் நடக்கவுள்ளதை முன்னிட்டு தமி ழகம், புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும் அதிமுக சார் பில் போட்டியிட விரும்புவோர் கட்சித் தலைமை அலுவலகத்தில் பிப்.4 முதல் 10-ம் தேதி வரை விருப்ப மனு அளிக்கலாம் என அறிவிக்கப்பட்டது. ரூ.25 ஆயிரம் கட்டணம் செலுத்தி, விண்ணப்பப் படிவங்களைப் பெற்று பூர்த்தி செய்து வழங்க வேண்டும் என்று கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங் கிணைப்பாளர் கே.பழனிசாமி ஆகியோர் அறிவித்திருந்தனர்.

அதன்படி, சென்னை ராயப் பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில், விருப்ப மனு விநியோகம் நேற்று தொடங் கியது. காலை 10 மணிக்கு விருப்ப மனு விநியோகத்தை ஒருங் கிணைப்பாளர்கள் ஓ.பன்னீர்செல் வம், பழனிசாமி ஆகியோர் தொடங்கி வைத்தனர். முன்னாள் அமைச்சர்கள் கோகுலஇந்திரா, மாதவரம் மூர்த்தி, எம்ஜிஆர் மன்ற செயலாளர் தமிழ்மகன் உசேன், வடசென்னை மாவட்டச் செயலாளர் ராஜேஷ், முன்னாள் எம்எல்ஏ ராஜலட்சுமி ஆகிய 5 பேருக்கு விருப்ப மனுக்களை வழங்கி தொடங்கிவைத்தனர்.

தமிழக அரசின் டெல்லி சிறப்புப் பிரதிநிதி தளவாய்சுந்தரம், முன் னாள் அமைச்சர் முக்கூர் சுப்பிர மணியம், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் குமார் உள்ளிட்டோரும் விரும்ப மனு பெற்றனர். விருப்ப மனுவில் மொத்தம் 25 கேள்விகள் உள்ளன. 10-ம் தேதி மாலை 5 மணி வரை விருப்ப மனுக்களை பூர்த்தி செய்து வழங்க அவகாசம் உள்ளது.

தேர்தல் அறிக்கை குழு

மக்களவைத் தேர்தலையொட்டி அதிமுக சார்பில் தேர்தல் அறிக்கை தயார் செய்வதற்காக குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுவின் ஆலோசனை கூட்டமும் நேற்று நடந்தது. குழுவின் பணியை ஓ.பன்னீர்செல்வம், கே.பழனிசாமி ஆகியோர் தொடங்கிவைத்து, ஆலோசனைகளை வழங்கினர்.

தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவில் கட்சியின் அமைப்புச் செயலாளர்கள் சி.பொன்னையன், நத்தம் விஸ்வநாதன், அமைச்சர்கள் டி.ஜெயக்குமார், சி.வி.சண் முகம், எம்எல்ஏ செம்மலை, பி.எச்.மனோஜ் பாண்டியன், மாநிலங்களவை முன்னாள் உறுப் பினர் ரபி பெர்னார்ட் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

வாக்களிக்கலாம் வாங்க

'மிஸ்டர் லோக்கல்' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close