[X] Close

திருவண்ணாமலையில் ஆணி படுக்கை மீது அமர்ந்து 51 யோகாசனங்களை செய்து விழிப்புணர்வு: பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களை தடுக்க வலியுறுத்தல்


yoga-awareness

  • kamadenu
  • Posted: 04 Feb, 2019 14:58 pm
  • அ+ அ-

உடல் ஆரோக்கியத்துக்கு இயற்கை மற்றும் சைவ உணவுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும், பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களை தடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி திருவண்ணாமலையில் ஆணிப் படுக்கை மீது 51 யோகாசனங்களை யோகா பயிற்றுநர் செய்து விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.

திருவண்ணாமலை சேஷாத்திரி சுவாமிகள் ஆசிரமத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு ஆசிரமத் தலைவர் முத்து குமாரசுவாமி தலைமை தாங்கினார். மருத்துவர் துரைராஜ் முன்னிலை வகித்தார். ஆணிப் படுக்கை மீது பத்மாசனம், தனுராசனம், சலபாசனம் உட்பட 51 யோகாசனங் களை யோகா பயிற்றுநர் கல்பனா செய்து விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.

அப்போது அவர் கூறும் போது, “பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும், உடல் ஆரோக்கியத்துக்கு அசைவ உணவை தவிர்த்து இயற்கை மற்றும் சைவ உணவை உட்கொள்ள வேண்டும். சைவ உணவை உட்கொள்ளும்போது நோய்களின் தாக்கம் குறையும். யோகாசனம் செய்வதால் உடலுக்கு புத்துணர்ச்சி மற்றும் மன உறுதி ஏற்படும்” என்றார். ஆணிப் படுக்கை மீது 51 யோகாசனங்களை செய்து முடித்ததும், அவருக்கு பலரும் வாழ்த்து மற்றும் பாராட்டு தெரிவித்தனர்.

வாக்களிக்கலாம் வாங்க

'தும்பா' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close