[X] Close

7 பேரை விடுதலை செய்யாவிட்டால் தேர்தலை புறக்கணிப்போம் என மக்கள் கருத்து: பேரறிவாளனின் தாய் அற்புதம்மாள் தகவல்


if-you-do-not-release-7-people-we-will-boycott-the-election

  • kamadenu
  • Posted: 04 Feb, 2019 14:55 pm
  • அ+ அ-

ராஜீவ் கொலைக் குற்றவாளிகள் 7 பேரை விடுதலை செய்யாவிட்டால் தேர்தலைப் புறக்கணிப்போம் என சில இடங்களில் மக்கள் கூறுவதாகப் பேரறிவாளனின் தாய் அற்புதம்மாள் தெரிவித்தார்.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலைக் குற்றவாளிகள் பேரறிவாளன் உட்பட 7 பேரின் விடுதலைக்கான மக்கள் சந்திப்புக் கூட்டம் ராமநாதபுரத்தில் நடைபெற்றது.

நாம் தமிழர் கட்சியின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் வெங்குளம் ராஜூ வரவேற்றார். தமிழ்நாடு மீனவர் உரிமைப் பாதுகாப்பு இயக்க மாநில ஒருங்கிணைப்பாளர் தீரன் திருமுருகன், தமிழர் தேசிய முன்னணியைச் சேர்ந்த வழக்கறிஞர் பசுமலை, நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் அறிவுச்செல்வன், மாவட்டச் செயலாளர் பத்மநாபன், மதிமுக மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் அரு.சுப்பிரமணியன், பெரியார் பேரவை நாகேசுவரன் உள்ளிட்ட பலர் பேசினர். கூட்டத்துக்குத் தலைமை வகித்து பேரறிவாளனின் தாய் அற்புதம்மாள் பேசியதாவது: சிறைவாசிகளுக்கு ஓட்டுரிமை இருந்தால் ஆட்சியாளர்கள் இவர் களை கவனித்திருப்பார்கள். நான் எனது மகனுக்காக உயிர்ப் பிச்சை கேட்கவில்லை.

மறுக்கப்பட்ட நீதியைத்தான் கேட்கிறேன். அப்பாவி கள் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்துள்ளது. இவ்வழக்கில் சிலர் காப்பாற்றப்பட்டுள்ளனர். ராஜீவ் காந்தியை கொலை செய்யப் பயன் படுத்தப்பட்ட குண்டு குறித்து முறையாக விசாரணை செய்யப்படவில்லை. உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதன் பேரில் சட்டப்பிரிவு 161-ன் கீழ் விடுதலை கோரி தமிழக அரசு சட்டப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பியது. ஆளுநர் இன்னும் அதில் கையெழுத்திடவில்லை. சட்டத்தை மதித்து ஆளுநர் கையெழுத்திட வேண்டும்.

எனது மகன் நிரபராதி. இதை மக்களிடம் எடுத்துச் சொல்லவே ஊர் ஊராகச் செல்கிறேன். சில இடங்களில் மக்கள் 7 பேரை விடுதலை செய்யவில்லை என்றால் தேர்தலைப் புறக்கணிப்போம் என்கின்றனர். எனவே கட்சி, மத பேதமின்றி சிறைவாசிகளை விடுதலை செய்ய அனைவரும் போராட வேண்டும். தீர்மானம் நிறைவேற்றி 6 மாதங்கள் முடிந்தும் ஆளுநர் கையெழுத்திட வில்லை என்றால் அடுத்தகட்டமாக சென்னையில் கூடி முடிவெடுக்கப்படும். அந்தக் கூட்டத்துக்கு அனைவரும் வந்து ஆதரவு தர வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close