[X] Close

மதுரை மத்திய சிறையில் போலீஸார் திடீர் சோதனை: கைதிகளிடம் கஞ்சா, செல்போன் புழக்கமா என ஆய்வு


police-raided-the-madurai-central-jail

மதுரை மத்திய சிறை.

  • kamadenu
  • Posted: 04 Feb, 2019 14:52 pm
  • அ+ அ-

மதுரை மத்திய சிறையில் தடை செய்யப்பட்ட பொருட்கள் உள்ளதா என, உதவி ஆணையர் தலைமையில் போலீஸார் நேற்று திடீர் சோதனை நடத்தினர்.

மதுரை மத்திய சிறையில் விசாரணை, தண்டனைக் கைதிகள் என, 1,300-க்கும் மேற்பட்டோர் அடைக்கப்பட்டுள்ளனர். கஞ்சா உள்ளிட்ட தடை செய்யப்பட்ட பொருட்கள் கைதிகளிடம் புழக்கத்தில் உள்ளதா என ஒவ்வொரு மாதமும் போலீஸார் சோதனை நடத்துவது வழக்கம். கடந்த டிசம்பர் மாதம் நடந்த சோதனையில் கைதிகளிடம் இருந்து 3 செல்போன்கள், 5 சிம்கார்டுகள், சார்ஜர்களைப் போலீஸார் பறிமுதல் செய்தனர்.

இந்நிலையில் திலகர்திடல் உதவி ஆணையர் வெற்றிச் செல்வன் தலைமையில் காவல் ஆய்வாளர்கள் மன்னவன், ராஜமுரளி உட்பட 115-க்கும் மேற்பட்ட போலீஸார் மதுரை மத்திய சிறையில் நேற்று காலை 6.30 மணிக்கு திடீரென நுழைந்தனர். விசாரணை, தண்டனைக் கைதி பகுதி, தீவிரவாதிகள் அடைக்கப்பட்டிருக்கும் பகுதி என, அனைத்து பிளாக்குகளிலும் தீவிர சோதனை மேற்கொண்டனர்.

கஞ்சா, செல்போன், சிம்கார்டு, சார்ஜர் போன்ற தடை செய்யப்பட்ட பொருட்கள் குறித்து ஆய்வு செய்தனர். மேலும் கைதிகளுக்கான சமையல் கூடம், மருத்துவமனை பகுதி, கழிவறைகள் உள்ளிட்ட இடங்களிலும் ஆய்வு செய்தனர். சுமார் 1 மணி நேரத்துக்கும் மேலாக நடந்த இந்த சோதனையில் தடை செய்யப்பட்ட பொருட்கள் எதுவும் சிக்கவில்லை எனப் போலீஸார் தெரிவித்தனர்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close