[X] Close

பெண்ணிடம் செல்போன் பறிக்க முயன்ற 2 இளைஞர்களுக்கு அடி, உதை


cellphone-snatching

சித்தரிப்புப் படம்.

  • kamadenu
  • Posted: 04 Feb, 2019 09:47 am
  • அ+ அ-

திருவள்ளூரில் சாலையில் நடந்து சென்ற பெண்ணிடம் செல்போனை பறிக்க முயன்ற 2 இளைஞர்களை பொதுமக்கள் அடித்து போலீஸில் ஒப்படைத்தனர்.

திருவள்ளூர், ஜவஹர்லால் நேரு சாலையில் பாரத ஸ்டேட் வங்கி அருகே நேற்று முன்தினம் இரவு நடந்து சென்று கொண்டிருந்த பெண்ணிடம் இருந்த செல்போனை 2 இளைஞர்கள் பறிக்க முயன்றனர். உடனே, அப்பெண் கூச்சலிட்டதால் அப்பகுதியில் இருந்த பொதுமக்கள், 2 இளைஞர்களையும் மடக்கிப் பிடித்து அடித்து உதைத்தனர்.

இதுகுறித்து போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப் பட்டது. உடனே சம்பவஇடத்துக்கு வந்த திருவள்ளூர் டவுன் போலீஸாரிடம் 2 இளைஞர்களையும் காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரித்தனர். விசாரணையில், அவர்கள் சென்னை-மேடவாக்கம் பகுதியை சேர்ந்த விக்னேஷ்குமார்(24), நவீன்குமார்(22) என்பதுதெரியவந்தது.

இதுகுறித்து, வழக்குப் பதிவு செய்துள்ள திருவள்ளூர் டவுன் போலீஸார், அந்த இளைஞர்கள் வேறு வழிப்பறி, திருட்டு சம்பவங்களில் ஈடுபட் டுள்ளனரா என்பது குறித்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close