[X] Close

விமானத்தில் சிறுத்தைக் குட்டியை கடத்தி வந்த சென்னை பயணி கைது


leopard-cub-smuggled-from-bangkok-to-chennai-watch-airport-staff-feed-it

  • பாரதி ஆனந்த்
  • Posted: 02 Feb, 2019 20:56 pm
  • அ+ அ-

தாய்லாந்தில் இருந்து இன்று விமானம் மூலம் சென்னை வந்தவரிடம் இருந்த சிறுத்தைக்குட்டியை விமான நிலைய அதிகாாிகள் பறிமுதல் செய்தனா். மேலும் அவரை கைது செய்தனர்.

தாய்லாந்தில் இருந்து சென்னை வரும் பயணி ஒருவரிடம் சிறுத்தைக் குட்டி இருப்பதாக விமான அதிகாாிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. 
இதனைத் தொடா்ந்து தாய்லாந்தில் இருந்து இன்று அதிகாலை சென்னை வந்த விமானத்தில் பயணம் செய்தவா்களிடம் சோதனை நடத்தப்பட்டது. 

அப்போது சந்தேகத்திற்கு இடமான வகையில் இருந்த நபரின் பையை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். சென்னையைச் சேர்ந்த காஜா முகைதீன் என்ற அந்த நபரின் பையிலிருந்து மிகவும் மெலிதாக விலங்கின் ஒலி கேட்டது. பையை திறந்து பார்த்தபோது உள்ளே சிறுத்தைக்குட்டி இருந்தது.

சிறுத்தைக் குட்டியை மீண்டும் அந்நாட்டுக்கே திருப்பி அனுப்பும் பணிகள் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close