[X] Close

ரூ.5 லட்சம் வருமானவரி உச்சவரம்பு தமிழிசை மகிழ்ச்சி ட்வீட்: விமர்சிக்கும் நெட்டிசன்கள்


  • முத்தலீப்
  • Posted: 01 Feb, 2019 16:37 pm
  • அ+ அ-

மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டது. பியூஸ் கோயல் தாக்கல் செய்த இடைக்கால பட்ஜெட்டில் வருமான வரி உச்சவரம்பு ரூ.2.5 லட்சத்திலிருந்து ரூ.5 லட்சமாக உயர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதை பலரும் வரவேற்றாலும் இது 3 மாதகால இடைக்கால பட்ஜெட் அடுத்து வரும் பாராளுமன்ற தேர்தலில் வெற்றிப்பெறும் அரசு இதை ஏற்று அமல்படுத்தினால்தான் உண்டு என்கிற விமர்சனமும் வைக்கப்படுகிறது.

இந்நிலையில் இதை பாஜக தமிழக தலைவர் தமிழிசை வரவேற்று ட்விட்டரில் பதிவு செய்துள்ளார். அவரது பதிவு:

“ஆண்டு வருமானம் ₹5 லட்சம் வரை உள்ளவர்கள் வருமான வரி செலுத்த வேண்டியதில்லை : பியூஷ் கோயலின் அசத்தல் பட்ஜெட்டால் 3 கோடி பேர் மகிழ்ச்சி”– என ஒரு பத்திரிகை செய்தியை மேற்கோள் காட்டியுள்ளார்.

இதற்கு நெட்டிசன்கள் விமர்சனம்:

ட்விட் மேன் காசிம் (Twitt man‏ @KasimInfoline ) என்பவர்3 மாநில தேர்தல் முடிவுகள் கண் முன்னே வந்து சென்றிருக்கும்... பயம்தான்” என பதிவு செய்துள்ளார்.

ஜெகதீஷ் என்பவர் பதிவில்(jagathesh‏ @Jagathesh357)  “தனிநபர் வருமான வரி உச்சவரம்பு ரூ.5 லட்சமாக அதிகரிப்பு - மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் # // 5 வருஷமா பண்ணமா இப்ப பன்ரங்க பார் அதுக்காக எல்லம் vote போடமுடியது ரெண்டாவது கிட்னி உருவத்தான் பாஜக கூப்பிடறாங்க பத்திரம் மக்களே Plan ah.? என்னத்தான் கூவுனாலும் தாமரை மலராது” என விமர்சித்துள்ளார்.

அருள்மொழி கனகு‏ (@Arulmozhikanagu ) என்பவர் “இது ஒரு இடைக்கால பட்ஜெட் மூன்று மாதமே அதிகாரம் கொண்ட ஒரு பட்ஜெட் என்றும் அழைக்கலாம். தேர்தல் முடிந்தவுடன் இதே பட்ஜெட்டை மாற்ற அதிகாரம் ஆளும் அரசுக்கு உண்டு.”  என பதிவு செய்துள்ளார்.

ஆல்ப்ரெட்ரின் என்பவர் (Alfredrin‏ @kannanoorreen)இங்குட்டு வருஷத்துக்கு 2 லட்சத்துல இருந்து கீழே போகுது இதுல 3 கோடி பேர் மகிழ்ச்சியாம். நம்புற மாதிரியா இருக்கு ?”  என விமர்சித்துள்ளார்.

ராஜா என்பவர் (Raaja‏ @Raaja)

“4 3/4 வருடம் அம்பானி , அதானிக்கு பட்ஜெட் போட்டுவிட்டு கடைசி மூன்று மாதத்தில் போனால் போகிறதென்று நீங்கள் கொடுக்கும் ஏமாற்று வேலை எல்லோரும் அறிவர் .” என பதிவிட்டுள்ளார்.

லோகேஸ்வரன் (Logeshwaran‏ @Logesh2791) என்பவர்

“இதை பண்றதுக்கு பதிலா பெட்ரோலுக்கு மத்திய மாநில அரசுகள் வரி வாங்குவதை தள்ளுபடி பண்ணலாமே, பெட்ரோல் விலை குறைந்த்து விட்டது என்றால், மற்ற பொருட்களுடைய விலையும் தானாக குறையும், இதனால் ஏழை மக்களுக்கு நன்மை இருக்கும்” என தங்க்லீஷில் பதிவிட்டுள்ளார்.

கோவை ரஹ்மான்.‏ (@AMRAHMA90443372) என்பவர் “இருக்கறதெல்லாம் GST என்றபெயரிலும் வேலைவாய்ப்பின்மை என்றபெயரிலும் பிடுங்கி கோவணத்துடன் நிற்கிறோம் . இனிதான் சம்பாதிக்கணும். யார் அந்த 3 கோடிப்பேர்.” என கேள்வி எழுப்பியுள்ளார்.

ஆன்றோன்‏ (@TamilsNetwork) என்பவர் பதிவில் “அஞ்சு லட்சத்தை தாண்டும் வேலைவாய்ப்புகளுக்கு மோடி பாடை கட்டி ஒன்னரை வருசமாச்சு.” என விமர்சித்துள்ளார்.

ஹுமன் சிங் (Human Singh....‏ @HumanSinging) என்பவர்  “பொறுப்பே இல்லையா? இது ஒரு பரிந்துரை ( முன்மொழிவு) Proposal. நாடாளுமன்றம் இதை ஏற்றுக்கொண்டால் அடுத்த நிதியாண்டில் இது மக்களின் பயன்பாடுக்கு வரும்.” என பதிவிட்டுள்ளார்.

மிட்ரான் என்பவர் (Mitron‏ @Mitron_56 )  தவறான செய்தி இடைக்கால பட்ஜெட்டில் இதுபோன்று அறிவிப்பதை முழுமையாக இந்த அரசால் செயல்படுத்த முடியாது அடுத்த அரசே தீர்மானிக்க முடியும்.” என விமர்சித்துள்ளார்.

மத்திய அரசின் அறிவிப்பை நெட்டிசன்கள் தெளிவாக விமர்சித்துள்ளதையே இது காட்டுகிறது.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close