[X] Close

வழக்கில் இருந்து நீதிபதிகள் விலகுவது ஏன்? - ஓய்வு பெற்ற நீதிபதி கே.சந்துரு விளக்கம்


chandru-interview

  • kamadenu
  • Posted: 01 Feb, 2019 06:26 am
  • அ+ அ-

 

ஆர்.பால சரவணகுமார்

வழக்கு விசாரணையில் இருந்து நீதிபதிகள் விலகுவது குறித்து சென்னை உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி கே.சந்துரு, ‘இந்து தமிழ்’ நாளிதழிடம் கூறியதாவது:

பொதுவாக ஒரு நீதிபதி தனது குடும்பம் மற்றும் உறவினர் கள் சம்பந்தப்பட்ட வழக்குகளை விசாரிக்கக்கூடாது. அதேபோல உறவினர்கள், குடும்ப உறுப்பினர் கள் வழக்கறிஞர்களாக இருந்தால் அந்த வழக்கையும் அவர் விசாரிக்க கூடாது என்பதுதான் பொதுவான நியதி. ஆனால் இதைத்தாண்டி சில நேரங்களில் நீதிபதிகள் தான் இந்த வழக்கை விசாரிக்க விரும்பவில்லை எனக் கூறுவதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கும். அந்த காரணங்களை வெளிப்படையாக தெரிவிக்க லாம். அல்லது தெரிவிக்காமலும் இருக்கலாம்.

அது அந்த நீதிபதியின் மனசாட்சிக்கு உட்பட்ட விசயம். ஆனால் பொதுவாக யாருக்கும் பயப்படாமல், எந்தவொரு விருப்பு, வெறுப்புக்கும் அப்பாற் பட்டு வழக்குகளை நேர்மை தவறாது விசாரிப்போம் என்ற உறுதிமொழி ஏற்றுத்தான் நீதிபதி யாக பதவிப்பிரமாணமே ஏற்றுக் கொள்கிறோம். இந்த சூழலில் ஒரு நீதிபதி இந்த வழக்கை தான் விசாரித்தால் பொதுமக்கள் நீதியின் மீது வைத்திருக்கும் நம்பிக்கைக்கு குந்தகம் ஏற்படுத் துவதாக இருக்கும் என நினைத் தால் அந்த வழக்கில் இருந்து விலகுவதில் எந்தத் தவறும் கிடையாது.

எல்லா நீதிபதிகளும் அந்த வழக்கை விசாரிக்க முடியாது எனக்கூறினால்தான் தவறு. கொடநாடு எஸ்டேட் தொடர்பாக முன்னாள் முதல்வர் ஜெயலலி தாவுக்கு எதிரான வழக்கை விசாரிக்க 7 நீதிபதிகள் மறுத்த நிலையில், 8-வது நீதிபதியாக நான் அந்த வழக்கை விசாரித்து தீர்ப்பளித்தேன். நீதிபதிகள் தகுந்த முகாந்திரமின்றி விலகுவதாக தெரிவித்தால், அதுதான் பிரச்சி னைக்கு வழிவகுக்கும். ஆனால் நாகேஸ்வரராவ் வழக்கைப் பொருத்தமட்டில் விலகியுள்ள 3 பேருக்குமே இந்த வழக்கு விசாரணையில் இருந்து விலக தனிப்பட்ட காரணங்கள் இருக்கும். அதில் வேறு யாரும் தலையிட முடியாது.

ஒரு நீதிபதி, வழக்கறிஞராக இருந்தபோது தனது கட்சிக்கார ருக்காக ஆஜராகி வாதிட்டு வழக்கில் வெற்றி பெற்றுவிட்டு, தற்போது நீதிபதியாக பதவியில் அமர்ந்த பிறகு தனது கட்சிக் காரர்கள் தொடர்பான வழக்கு தன் முன்னால் விசாரணைக்கு வருகிறது என தெரியவந்தால், தனது நேர்மைக்கு பங்கம் வரக்கூடாது என்ற எண்ணத்தில் அதில் இருந்து விலகுவதுதான் சரியானதாக இருக்கும். அதில் குறை கூற முடியாது. இவ்வாறு அவர் கூறினார்.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close