[X] Close

புதுச்சேரி மக்கள் நீதி மய்யம் தொடக்கம்; மாநில சட்டப்பேரவை தேர்தலுக்கு காத்திருக்கிறோம்: கமல்ஹாசன்


puducherry-people-s-justice-center-is-starting

கமல்ஹாசன்

  • kamadenu
  • Posted: 31 Jan, 2019 15:13 pm
  • அ+ அ-

புதுச்சேரி சட்டப்பேரவை தேர்தலுக்காக காத்திருக்கிறோம் என்று மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்தார்.

மக்கள் நீதி மய்யம் கட்சியை நடிகர் கமல்ஹாசன் கடந்த 2018-ம் ஆண்டு பிப்ரவரி 21-ம் தேதி தொடங்கினார். தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து மக்களை சந்தித்து வருகிறார். விரைவில் வரவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் போட்டி யிடும் என்று கமல்ஹாசன் தெரிவித் துள்ளார். தேர்தலுக்கான பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ள அவர், கட்சியை புதுச்சேரி மாநிலத்தில் தொடங்க திட்டமிட்டார். அதன்படி புதுச்சேரி மக்கள் நீதி மய்யம் கட்சி தொடக்க நிகழ்ச்சி, சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் நேற்று நடந்தது. மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் புதுச்சேரி மாநில கட்சியின் கிளையைத் தொடங்கி வைத்தார்.

புதுச்சேரி மாநில மக்கள் நீதி மய்யம் கட்சியின் செயற்குழு தலைவராக மா.சுப்பிரமணியம் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் திமுக மாநில செயலாளராகவும், சட்டப்பேரவை உறுப்பினராகவும் இருந்துள்ளார் என்பது குறிப்பிடத் தக்கது. நிகழ்ச்சியில் கட்சியின் துணைத் தலைவர் மகேந்திரன், பொதுச்செயலாளர் அருணாச் சலம், பொருளாளர் சுகா உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்துக் கொண்டனர்.

நிகழ்ச்சியில் கமல்ஹாசன் பேசியது:

தமிழகத்தின் மேம்பாட்டுக்கு என்ன செய்ய முடியுமோ, கட்சியை எப்படி விரிவுப்படுத்த முடியுமோ, அதனை செய்து கொண்டிருக்கிறோம். தற்போது புதுச்சேரி மாநிலத்தில் கட்சி தொடங்கப்பட்டுள்ளது. மாற்றம், நேர்மையை எதிர்ப்பார்த்து கட்சியில் அதிக அளவில் மக்கள் சேர்ந்துக் கொண்டிருக்கின்றனர். புதுச்சேரிக்கு தேவையானது குறித்து விவாதிக்கப்பட்டுள்ளது. தமிழர் வாழும் இடங்களில் கட்சி தொண்டாற்ற வேண்டும் என்று நினைக்கிறோம்.

புதுச்சேரி சட்டப்பேரவை தேர்தலுக்கு காத்திருக்கிறோம். தமிழகத்தை உயர்த்தும் ஆசை இருக்கிறது. நேர்மையான ஓட்டுப் பதிவை மக்கள் செய்ய வேண்டும். நேர்மையற்றவர்கள் உங்களுடன் சேர்ந்துக் கொள்ள அனுமதிக்க வேண்டாம். பணம் கொடுத்தால் வாங்க வேண்டாம். ஒரு நல்ல அரசை தேர்ந்தெடுக்க வேண்டும். நாம் எல்லோரும் சேர்ந்து தமிழகத்தை குடி தண்ணீருக்குக் கூட வசதியில்லாமல் ஆக்கி விட்டோம். இதனை நாம் எல்லோரும் சேர்ந்து மாற்ற வேண்டும். திருடன் திருடன் தான். நல்லவன் நல்லவன் தான். நாம் நல்லவர்களாக மாறும் முயற்சியில் கற்றுக் கொண்டிருக்கிறோம்

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

பின்னர் கமல்ஹாசன் செய்தியாளர்களுக்கு அளித்தப் பேட்டி:

புதுச்சேரியில் தொடங்கப் பட்டுள்ள கட்சி இங்கிருந்து செயல்படும். நாடாளுமன்றத் தேர்தல் குறித்து ஆய்வு நடத்தி வருகிறோம். எல்லா போராட்டங்களிலும் அரசின் அணுகுமுறை சரியாகவில்லை. நாங்கள் உட்பட பல்வேறு தரப்பினரின் வேண்டுகோளை ஏற்றும் மற்றும் மாணவர்களின் எதிர்க்காலத்தை கருதியும் வேலை நிறுத்தப் போராட்டத்தை கைவிட்ட அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவை எதிர்க்க கூட்டணியாகவும் செயல்படலாம். தனியாகவும் செயல்படலாம். எங்களுக்கு நல்ல நண்பர்கள் கிடைப்பது தான் முக்கியம். எப்படியாவது நண்பர்கள் கிடைப்பது முக்கிய மில்லை. பிரியங்கா காந்தி முழுநேர அரசியலில் ஈடுபடுவதை வரவேற்கி றேன். கட்சி உறுப்பினர்களின் எண்ணிக்கை 10 லட்சத்தை தாண்டி பல நாட்களானது. தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் தனித்து நின்றாலும் பூத் கமிட்டிக்கு உறுப்பினர்கள் தயாராக உள்ளனர்.

மாதிரி கிராமத் திட்டம் சிறப்பாக சென்றுக் கொண்டிருக்கிறது. திருவள்ளூர் மாவட்டத்தில் தத்தெடுக்கப்பட்ட அதிகத்தூர் கிராமத்தில் 100 கழிப்பறைகள் கட்ட முடிவு செய்தோம்.

தற்போது 25 கழிப்பறைகளை கட்டி முடித்திருக் கிறோம். இன்னும் 8 கிராமங்களை தத்தெடுக்க உள்ளோம் இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close