[X] Close

கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் விவசாயிகளுக்கு ரூ.505 கோடி வரை நிவாரணம்: அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தகவல்


gaja-cyclone

  • kamadenu
  • Posted: 31 Jan, 2019 10:23 am
  • அ+ அ-

கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் விவசாயிகளுக்கு ரூ.505 கோடி வரை நிவாரணம் வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்தார்.

கடந்த நவம்பர் மாதம் டெல்டா மாவட்டங்கள் உள்ளிட்ட 12 மாவட்டங்களில் சேதத்தை ஏற்படுத்திய கஜா புயல் நிவாரணம் தொடர்பாக அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறியதாவது:கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களில் 94 சதவீதம் அதாவது 6 லட்சத்து 41 ஆயிரம் பேருக்கு 27 பொருட்கள் அடங்கிய தொகுப்பு வழங்கப்பட்டுள்ளது. 3 லட்சத்து 40 ஆயிரத்து 520 கால்நடைகள் இறந்துள்ளன. இவற்றின் உரிமையாளர்களில் 51 சதவீதம் பேருக்கு ரூ.14கோடி அளவுக்கு நிவாரணம் அளிக்கப்பட்டுள்ளது. வேளாண்மை பயிர்களுக்கு 71 சதவீதமும், தோட்டக்கலை பயிர்களுக்கு 65 சதவீதமும் நிவாரணம் அளிக்கப்பட்டுள்ளது.

கஜா புயலுக்காக மத்திய அரசு உடனடி தற்காலிக நிவாரணமாக ரூ.1,000 கோடி அளித்தது. தற்காலிகமாக நாம் கேட்ட தொகைக்கு,மத்திய குழு கணக்கெடுப்பின் மூலம் ஒரு தொகை அளித்தார்கள். இது போதுமானது இல்லை. எனவே,சுமையை மாநில அரசே ஏற்றுக் கொண்டு மக்களுக்கு தேவையான நிவாரண உதவிகளை தொய்வின்றி வழங்கி வருகிறது. விதிகள்படி பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கியுள்ளோம்.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு முழுமையாக வாழ்வாதாரத்தை அளிக்க, மறுவாழ்வு திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் புதிய வீடுகள் கட்டுதல் உள்ளிட்ட பணிகளுக்காக மூத்தஐஏஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மக்களை சகஜ நிலைக்கு கொண்டுவருவது மட்டுமே எங்கள் நோக்கம். நிவாரண உதவிகள் மூலம் மக்களின் நம்பிக்கையைப் பெற்றுள்ளோம்.

வேளாண் துறை மூலமாகரூ. 505 வரை பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஒரு லட்சம் வீடுகள் கட்டித்தரப்படும் என்று முதல்வர் அறிவித்துள்ளார்.

கஜா புயல் பாதிக்கப்பட்ட பகுதிகளில் பெரும்பாலும் ஓட்டுவீடுகள் உள்ளன. கடலோரப் பகுதிகளில் இதுபோன்ற வீடுகள் இருக்கக் கூடாது என்பதால், அங்கு நல்ல கான்கிரீட் வீடுகள் கட்டித் தரப்படுவதுடன், கூடுதலாக பாதுகாப்பு மையங்களும் ஏற்படுத்தப்படும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close