[X] Close

கபாலீஸ்வரர் கோயில் திருமண மண்டபத்தில் திருமணம் நடத்த முன்பதிவு தொடங்கியது: ஒரு நாள் வாடகை ரூ.10 லட்சமாக நிர்ணயம்


kapaleeshwarar-temple-wedding-hall

  • kamadenu
  • Posted: 29 Jan, 2019 13:02 pm
  • அ+ அ-

கபாலீஸ்வரர் கோயில் திருமண மண்டபத்தில் திருமணங்கள் நடத்து வதற்கான முன்பதிவு தொடங்கியது. ஒரு நாள் வாடகை ரூ.10 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

சென்னை ஆர்.ஏ.புரத்தில் உள்ள பசும்பொன் முத்துராமலிங்கம் சாலையில் மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலுக்கு சொந்தமாக 2,447 ஏக்கர் நிலம் இருந்தது. இந்த நிலத்தில், 68,272 சதுர அடி கொண்ட அதி நவீன குளிர்சாதன வசதியுடன் கூடிய திருமண மண்டபம் ரூ.16 கோடியே 75 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டது.

திருமண கூடத்தில் திருமண நிகழ்ச்சியை காண 1,000 நபர்கள் அமர்ந்து காணும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. முக்கிய பிரமுகர்கள் உணவு அருந்த 80 இருக்கைகள் கொண்ட தாகவும், தரைத் தளத்தில் 475 இருக்கைகள் கொண்ட உணவு அருந்தும் கூடமாகவும் அமைக்கப்பட்டுள்ளது.

மணமகன், மணமகள் அறைகளைத் தவிர 12 தங்குமிட அறைகள் அமைக்கப்பட்டுள்ளன. இது தவிர, 24 மணி நேரமும் ஜெனரேட்டர், கண்காணிப்புக்கேமரா வசதி, தீயணைப்புக் கருவிகள் ஆகியவற்றுடன் பாதுகாப்பு வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.

நான்கு சக்கர வாகனங்கள், இரு சக்கர வாகனங்கள் நிறுத்து வதற்கு தேவையான இடமும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த மண்டபத்தை முதல்வர் கே.பழனிசாமி கடந்த சில வாரங்களுக்கு முன்பு திறந்து வைத்தார்.

இதைத்தொடர்ந்து, திருமண மண்டபத்தை முன்பதிவு செய்யும் பணி தொடங்கியுள்ளது. திருமண மண்டபத்துக்கு ஒரு நாள் வாடகையாக ரூ.10 லட்சம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக, இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் சிலர் கூறியதாவது:

மண்டபத்தை முன்பதிவு செய்ய முன்பணமாக ரூ.5 லட்சம் செலுத்த வேண்டும். தண்ணீர், மின்சாரம் உள்ளிட்ட கட்டணங்களை எடுத்துக் கொண்டு ரூ.5 லட்சத்தில் மீதித் தொகை திருமணம் முடிந்தவுடன் மண்டபத்தை புக் செய்தவரிடம் திருப்பி வழங்கப்படும்.

வாடகையாக ரூ.10 லட்சம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதற்குரிய ஜிஎஸ்டியும் வசூலிக்கப் படும். பலர் ஆர்வத்துடன் மண்டபத்தை முன்பதிவு செய்து வருகின்றனர்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close