தேர்தல் தோல்வி எதிரொலி: நடிகர் விஜய் கட்சியில் இணைந்த நாகை அதிமுக மகளிரணியினர்!


நடிகர் விஜய் கட்சியில் இணைந்த நாகை அதிமுக மகளிரணியினர்

நாகப்பட்டினம்: மக்களவைத் தேர்தலில் அதிமுக தோல்வி அடைந்துள்ள நிலையில், நாகையைச் சேர்ந்த அதிமுக மகளிரணியினர் 200-க்கும் மேற்பட்டோர் அக்கட்சியிலிருந்து விலகி நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்துள்ளனர்.

நடிகர் விஜய் தொடங்கியுள்ள தமிழக வெற்றிக் கழகம் கட்சியில், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஏராளமானவர்கள் இணைந்து வருகின்றனர். இதனிடையே மக்களவைத் தேர்தலில் அதிமுக படுதோல்வி அடைந்ததை தொடர்ந்து, நாகையில் அதிருப்தி அடைந்த அதிமுக மகளிரணியினர் 200-க்கும் மேற்பட்டோர், அக்கட்சியில் இருந்து விலகி நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தனர்‌.

நாகையில் நேற்று மாலை நடைபெற்ற நிகழ்ச்சியில் அதிமுக நாகை நகர மகளிரணி துணைச்செயலாளர் நல்லாச்சி தலைமையில் அக்கட்சியில் இருந்து விலகிய பெண்கள் மற்றும் இளைஞர்கள், தமிழக வெற்றிக் கழகத்தின் நாகை மாவட்டச் செயலாளர் சுகுமாறன் மற்றும் மகளிரணி மாவட்ட தலைவி சுகன்யா முன்னிலையில், விஜயின் தமிழக வெற்றிக் கழகத்தில் தங்களை இணைத்துக் கொண்டனர்.