[X] Close

வண்ணாரப்பேட்டை - டிஎம்எஸ் இடையே விரைவில் மெட்ரோ ரயில் இயக்க வாய்ப்பு


metro-train

கோப்புப்படம்

  • kamadenu
  • Posted: 28 Jan, 2019 15:44 pm
  • அ+ அ-

வண்ணாரப்பேட்டை - டிஎம்எஸ் இடையே பணிகள் முடிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த புதிய தடத்தில் மெட்ரோ ரயில்சேவை தொடங்குவது எப்போது என பொதுமக்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அதேநேரம் அடுத்த மாதம் முதல் வாரத்தில் புதிய ரயில் சேவை தொடங்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

சென்னையில் அடுத்தகட்டமாக டிஎம்எஸ் - சென்ட்ரல் வழியாக வண்ணாரப்பேட்டைக்கு 10 கி.மீ தூரத்துக்கு மெட்ரோ ரயில் இயக்கவுள்ளது. ஆயிரம் விளக்கு, எல்ஐசி, ஓமந்தூரார் அரசினர் தோட்டம், சென்னை சென்ட்ரல், மண்ணடி மற்றும் வண்ணாரப்பேட்டையில் மெட்ரோ ரயில் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த தடத்தில் மெட்ரோ ரயில் இயக்கம் மற்றும் பாதுகாப்பு அம்சங்கள் குறித்து ஆய்வு நடத்திய ரயில்வே பாதுகாப்பு ஆணையர் (தெற்கு) ஏ.கே.மனோகரன், 2 மெட்ரோ ரயில் நிலையங்களை சுட்டிக்காட்டி பணிகளை மேம்படுத்த வேண்டு மென நிர்வாகத்துக்கு உத்தர விட்டுள்ளார்.

இதுதொடர்பாக மெட்ரோ ரயில் அதிகாரிகள் கூறும்போது, ‘‘டிஎம்எஸ் - வண்ணாரப்பேட்டை வழித்தடத்தில் ஆய்வு பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. ஆணையர் குறிப்பிட்ட சில பணிகளை நாங்கள் மேம்படுத்தி வருகிறோம். எனவே, அடுத்த ஓரிரு நாளில் இந்த தடத்தில் மெட்ரோ ரயில் இயக்குவதற்கான ஒப்புதல் கிடைக்கும் என எதிர்பார்க்கிறோம். அதன்பிறகு, தமிழக அரசுக்கு முறையாக அறிவிக்கப்பட்டு, மக்களின் பயன்பாட்டுக்கு மெட்ரோ ரயில்சேவை தொடங்கிவைக் கப்படும். அடுத்த மாதம் முதல் வாரத்தில் இந்த தடத்தில் மெட்ரோ ரயில்சேவை தொடங்க வாய்ப்புள்ளது’’ என்றனர்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close