[X] Close

மதுரை, நெல்லை, தஞ்சையில் ரூ.450 கோடியில் கட்டப்பட்டுள்ள உயர் சிகிச்சை மையங்கள் நாளை திறப்பு: மதுரையில் எய்ம்ஸ் அடிக்கல் நாட்டு விழாவின்போது பிரதமர் மோடி திறந்துவைக்கிறார் 


aiims-hospital-foundation-stone-laying-ceremony

பிரதமர் பங்கேற்கும் எய்ம்ஸ் அடிக்கல் நாட்டு விழா மேடை அமைக்கும் பணியை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், சுகாதாரத் துறை செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன், ஆட்சியர் எஸ்.நடராஜன் ஆகியோர் பார்வையிட்டனர்.

  • kamadenu
  • Posted: 26 Jan, 2019 12:01 pm
  • அ+ அ-

மதுரை

எய்ம்ஸ் மருத்துவமனை அடிக்கல் நாட்டு விழாவின்போது மதுரை, நெல்லை, தஞ்சையில் கட்டப்பட்டுள்ள ரூ.450 கோடி மதிப்பிலான 940 படுக்கை வசதிகளுடன் கூடிய உயர் சிகிச்சை மையங்களையும் பிரதமர் நரேந்திர மோடி மதுரையிலிருந்தவாறு திறந்துவைக்கிறார் என சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவ மனைக்கான அடிக்கல் நாட்டுவிழா நாளை (ஜன.27) விமான நிலை யம் அருகே மண்டேலா நகரில் நடைபெறுகிறது. பிரதமர் நரேந் திர மோடி அடிக்கல் நாட்டிப் பேசுகிறார். இவ்விழாவில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், முதல்வர் கே.பழனிசாமி, மத்திய, மாநில அமைச்சர்கள் பங்கேற் கின்றனர். இவ்விழா முடிந்ததும் அருகிலேயே நடக்கும் பாஜக பொதுக்கூட்டத்திலும் பிரதமர் பங்கேற்றுப் பேசுகிறார்.

எய்ம்ஸ் அடிக்கல் நாட்டு விழாவுக்கான ஏற்பாடுகளை தமிழக சுகாதாரத் துறை செய்து வருகிறது. விழா ஏற்பாடுகள் குறித்து நேற்று சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் , கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜு, வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், சுகாதாரத் துறைச் செயலாளர் ராதாகிருஷ் ணன் உள்ளிட்டோர் பார்வை யிட்டனர். பின்னர் செய்தியாளர்களி டம் அமைச்சர் சி.விஜய பாஸ்கர் கூறியதாவது:

மதுரையில் நடக்கவுள்ள எய்ம்ஸ் அடிக்கல் நாட்டு விழாவில் பிரதமரு டன் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜெ.பி.நட்டா. மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன், முதல்வர் கே.பழனிசாமி . துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் தமிழக அமைச்சர்கள், அதிகாரிகள் கலந்துகொள்கின்றனர்.

எய்ம்ஸ் தமிழகத்துக்கு, குறிப்பாக தென் தமிழகத்துக்குக் கிடைத்த மிகப் பெரிய திட்டம். எய்ம்ஸ் மருத்துவமனையின் மூலம் 100 மருத்துவர்கள், 60 செவிலியர்கள் மற்றும் 750 படுக்கை வசதியும் கிடைக்கவுள்ளது. மேலும் மருத்துவ மேற்படிப்புக்கு 350 இடங்கள் கிடைக்கும். உலகத்தரம் வாய்ந்த ஆராய்ச்சி மையம் உள்ள மருத்துவ வளாகமாக அமையும். ஜெயலலிதா வின் கனவுத் திட்டத்தை பிரதமர் மோடி நிறைவேற்றியுள்ளார்.

மதுரை அரசு மருத்துவக்கல்லூரி வளாகத்தில் ரூ.150 கோடியில் 350 படுக்கை வசதிகளுடன் உயர் சிகிச்சை மருத்துவமனை, திருநெல் வேலி மருத்துவக் கல்லூரியில் ரூ.150 கோடியில் 290 படுக்கை வசதிகளுடன் சிறப்பு உயர் சிகிச்சை மையம், தஞ்சை மருத்துவக் கல்லூரியில் ரூ.150 கோடியில் 300 படுக்கை வசதிகளுடன் சிறப்பு உயர் சிகிச்சை பல்நோக்கு மருத்துவ மனை கட்டப்பட்டுள்ளன. மொத்தம் ரூ.450 கோடி செலவில் 940 படுக்கை வசதி கொண்ட சிறப்பு பல் நோக்கு மருத்துவமனைகளை மதுரையிலிருந்தபடி பிரதமர் மோடி திறந்து வைக்கிறார். இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.

மதுரையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடு

மதுரையில் நாளை எய்ம்ஸ் மருத்துவமனைக்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெறுகிறது. பிரதமர் வருகையையொட்டி மதுரை முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

காலை 11.30 மணிக்கு எய்ம்ஸ் மருத்துவமனை அடிக்கல் நாட்டு விழா தொடங்குகிறது. 15 நிமிடங்கள் பிரதமர் உரையாற்றியதும் அரசு விழா நிறைவடைகிறது. பின்னர் அரசு விழா மேடையிலிருந்து அருகேயுள்ள பாஜக பொதுக்கூட்ட மேடைக்கு பிரதமர் காரில் செல்கிறார்.

பிரதமருடன் விழா மேடையில் ஆளுநர், முதல்வர், துணை முதல்வர் உட்பட 8 பேருக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அமைச்சர்கள், எம்பி., எம்எல்ஏக்கள் உட்பட 1,500 பேர் மட்டுமே பந்தலில் அமரும் வகையில் இருக்கைகள் போடப்படுகின்றன.

தமிழக சட்டம்- ஒழுங்கு கூடுதல் டிஜிபி விஜயகுமார் தலைமையிலான அதிகாரிகள் பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளனர். நேற்றிரவே விழா நடைபெறும் பகுதி மத்தியப் பாதுகாப்புப் படையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

வாக்களிக்கலாம் வாங்க

'லிசா உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close