[X] Close

சேலம் அறிவியல் கண்காட்சியில் 102 அரசுப் பள்ளி மாணவர்களின் படைப்புகள் பங்களிப்பு


salem-science-exhibition

  • kamadenu
  • Posted: 25 Jan, 2019 17:59 pm
  • அ+ அ-

சேலம்

பள்ளிக் கல்வித்துறை சார்பில் சேலம் ஏவிஎஸ் பொறியியல் கல்லூரி வளாகத்தில் புத்தாக்க அறிவியல் ஆய்வு விருது கண்காட்சி நடந்தது. இதில், 102 பள்ளிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகளின் அறிவியல் கண்டுபிடிப்புகள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன.

இந்நிகழ்ச்சிக்கு, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கணேஷ்மூர்த்தி முன்னிலை வகித்தார். கண்காட்சியை ஆட்சியர் ரோஹிணி தலைமை வகித்து தொடங்கி வைத்து பேசியதாவது:

அரசுப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு எவ்வளவு திறமைகள் உள்ளன என்பதை இங்கு நடைபெறும் ஒவ்வொரு படைப்பிலும் பார்க்க முடிகிறது. கடந்த ஆண்டு நடந்த கண்காட்சியில் ஒரு மாணவருக்கு தேசிய அளவில் அங்கீகாரம் கிடைத்தது. அதேபோல, அனைத்து மாணவ, மாணவிகளும் இன்னும் முயற்சி செய்து தேசிய அளவிலான கண்காட்சிகளில் பங்குபெற வேண்டும்.

மாணவ செல்வங்களான உங்களிடம் ஏராளமான திறமைகள் உள்ளன. உங்களுக்கு பல்வேறு கற்பனைத் திறனுடன் கூடிய புது விதமான சிந்தனைகள் தோன்றும். அந்த திறனை நீங்கள் இதுபோன்ற அறிவியல் கண்காட்சிகளில் வெளிக்கொண்டுவந்து பயன்படுத்த வேண்டும்.

இவ்வாறு ஆட்சியர் பேசினார்.

கண்காட்சியில், சென்னை இந்திய அறிவியல் தொழில்நுட்பக் கழகம் சார்பில் 2018-19-ம் ஆண்டுக்கான புத்தாக்க அறிவியல் ஆய்வு விருதுக்கு தேர்வு செய்யப்பட்ட 47 அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி, 47 ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, 5 அரசு நிதியுதவி பெறும் பள்ளி, 3 ஆங்கிலோ-இந்திய பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு தங்களது கண்டுபிடிப்புகளை காட்சிப்படுத்தினர்.

கண்காட்சியில், மரங்களை வேரூடன் பிடுங்கி வேறிடத்தில் நடும் தொழில்நுட்பம், சூரிய ஒளி ஆற்றலைப் பயன்படுத்தி தானியங்கி விவசாய கருவிகளை செயல்படுத்துவது, ஹைட்ராலிக் தொழில் நுட்பத்தை பயன்படுத்தி வாகனங்களை சுத்தப்படுத் துதல் உள்ளிட்டபல்வேறு படைப்புகள் இடம்பெற்றிருந் தன. இவை மாணவர்களின் மத்தியில் வரவேற்பைபெற்றது.

ஏவிஎஸ் பொறியியல் கல்லூரி முதல்வர் எஸ்.ரகுநாதன், மாவட்ட கல்வி அலுவலர்கள் (சேலம்) ஜோதி, மதன்குமார் (சேலம் ஊரகம்) ,விஜயா (எடப்பாடி), ராமசாமி (சங்ககிரி), சிவராமன் (ஆத்தூர்) உட்பட பலர் கலந்து கொண்டனர்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close