[X] Close

பழைய வாக்குச்சீட்டு முறைக்கு திரும்ப மாட்டோம்: தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா திட்டவட்டம்


old-ballot-system

சுனில் அரோரா

  • kamadenu
  • Posted: 25 Jan, 2019 15:43 pm
  • அ+ அ-

புதுடெல்லி

பழைய வாக்குச்சீட்டு முறைக்கு மீண்டும் திரும்ப மாட்டோம் என்று தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா உறுதிபட தெரிவித்தார்.

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் முறைகேடு நடப்பதாக எதிர்க்கட்சிகள் அவ்வப் போது குற்றம் சாட்டி வருகின்றன. பழைய வாக்குச் சீட்டு முறைக்கு திரும்ப வேண்டும், உலகின் பெரும் பாலான நாடுகளில் வாக்குச்சீட்டு முறையே நடைமுறையில் உள்ளது என்றும் கூறி வருகின்றன.

அண்மையில் அமெரிக்காவில் தஞ்சமடைந்த இந்தியர் சையது சுஜா என்ற ஹேக்கர், இந்தியாவில் பயன்பாட்டில் உள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் முறைகேடு செய்ய முடியும் என் றார். மேலும் 2014 மக்களவை தேர் தலில் இந்த முறைகேடு மூலமே பாஜக ஆட்சிக்கு வந்ததது என்றும் கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.

இவருக்கு எதிராக தேர்தல் ஆணையம் அளித்த புகாரின் பேரில் டெல்லி போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

இந்நிலையில் தேசிய வாக்கா ளர் தினத்தை முன்னிட்டு டெல்லியில் நேற்று நடைபெற்ற கருத்தரங் கில் தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா பேசியதாவது:

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களை கால்பந்தாக கரு தும் நிலை உள்ளது. அதன் பயன் பாட்டை சிலர் உள்நோக்கத்துடன் எதிர்க்கின்றனர். என்றாலும் நாங்கள் மீண்டும் பழைய வாக்குச்சீட்டு முறைக்கு திரும்ப மாட்டோம். இது ஒட்டுமொத்த தேர் தல் ஆணையத்தின் கருத்தாகும். கடந்த கால தேர்தல் ஆணையத்தின் கருத்து இதுவாகத்தான் இருந்தது.

வாக்குப் பெட்டிகளை தலை யில் சுமந்து செல்வதும், அதற்காக திடகாத்திரமான ஆட்களை நியமிப்பதும், வாக்கு எண்ணிக்கை யில் தாமதம் ஏற்படுவதும், வாக்குச் சாவடி பணியாளர்கள் கடும் அச்சுறுத்தலுக்கு ஆளாவதும் பழைய வாக்குச்சீட்டு முறையில் இருந்தது. அந்தக் காலத்துக்கு நாங்கள் திரும்ப மாட்டோம்.

வாக்குப்பதிவு இயந்திரங்கள் தொடர்பாக விமர்சனங்களை முன்வைத்தால் திறந்த மனதுடன் பரிசீலிக்கத் தயாராக உள்ளோம். அதேவேளையில் எந்தவித அச் சுறுத்தல் ஏற்பட்டாலும் மின்னணு வாக்குப் பதிவு இயந்திர பயன்பாட்டை கைவிட மாட்டோம்.

இவ்வாறு சுனில் அரோரா கூறினார்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close