[X] Close

முன்னாள் நீதிபதி எஸ்.கே.கிருஷ்ணன் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்


former-judge-skkrishnan-joined-the-congress-party

  • kamadenu
  • Posted: 25 Jan, 2019 15:32 pm
  • அ+ அ-

சென்னை

ஓய்வுபெற்ற நீதிபதி எஸ்.கே.கிருஷ்ணன், முன்னாள் எம்எல்ஏ நல்லமுத்து உள்ளிட்ட முக்கியப் பிரமுகர்கள் 18 பேர் காங்கிரஸில் இணைந்தனர்.

சென்னை உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி எஸ்.கே.கிருஷ்ணன், பெரம்பலூர் தொகுதி முன்னாள் எம்எல்ஏ டாக்டர் நல்லமுத்து, ஓய்வுபெற்ற வருமானவரித் துறை அதிகாரிகள் எஸ்.நடராஜன், எம்.நாகேந்திரன், கருப்புசாமி, ஓய்வுபெற்ற பாரத் மிகுமின் நிறுவன (பெல்) அதிகாரிகள் பி.தனக்கொடி, ஆர்.பன்னீர், கே.கிருஷ்ணசாமி, ஹிந்துஸ்தான் டைம்ஸ் குழும துணை மேலாளர் பி.தினேஷ்குமார், இந்தியன் ஓவர்சீஸ் வங்கி தொழிற்சங்கத் தலைவர் எம்.ராமசாமி, ஓய்வுபெற்ற மின்வாரிய அதிகாரி எம்.பாலு, ஓய்வுபெற்ற வங்கி அதிகாரி எஸ்.அய்யாசாமி, எக்ஸ்னோரா இன்டர்நேஷனல் அமைப்பைச் சேர்ந்த எஸ்.சந்தானலட்சுமி, ஏ.கே.பொன்னுரங்கம் ஆகியோர் காங்கிரஸில் இணைந்தனர்.இதற்கான நிகழ்ச்சி, தமிழக காங்கிரஸ் தலைமை அலுவலகமான சென்னை சத்தியமூர்த்தி பவனில் நேற்று நடந்தது. கட்சியில் இணைந்தவர்களுக்கு தமிழக காங்கிரஸ் தலைவர் சு.திருநாவுக்கரசர் கட்சியின் உறுப்பினர் அட்டையை வழங்கினார். காங்கிரஸின் ‘சக்தி’ திட்டத்திலும் அவர்களை இணைத்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய திருநாவுக்கரசர், ‘‘ஓய்வுபெற்ற நீதிபதி, ஓய்வுபெற்ற உயர் அதிகாரிகள் பலர் காங்கிரஸில் இணைந்திருப்பது வரும் தேர்தலில் காங்கிரஸ் ஆட்சியமைக்கும் என்பதை உறுதிப்படுத்துகிறது. ராகுல் காந்திக்கு துணையாக பிரியங்கா அரசியலுக்கு வந்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. பொய் வாக்குறுதிகளை அளித்து ஆட்சிக்கு வந்த மோடி அரசை வீழ்த்த நாம் அனைவரும் இணைந்து பணியாற்ற வேண்டும்’’ என்றார்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close