[X] Close

பழநி தைப்பூச விழாவின் நிறைவாக தெப்பத்தேரில் சுவாமி உலா; இரவு கொடியிறக்கம் நடந்தது


palani-thaipoosam

தெப்பத்தில் வள்ளி, தெய்வானை சமேத முத்துக்குமார சுவாமி.

  • kamadenu
  • Posted: 25 Jan, 2019 15:25 pm
  • அ+ அ-

பழநி

பழநி தைப்பூசத் திருவிழாவின் நிறைவாக நேற்றிரவு சுவாமி தெப்பத்தேரில் எழுந்தருளி பக்தர்களுக்குக் காட்சியளித்தார். திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

திண்டுக்கல் மாவட்டம் பழநியில் தைப்பூசத் திருவிழா கடந்த 15-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.10 நாட்கள் நடைபெற்ற விழாவில் தினமும் சுவாமி தந்தப்பல்லக்கு, வெள்ளிக் காமதேனு, தங்கமயில் வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவின் ஆறாம் நாளான முத்துக்குமார சுவாமி- வள்ளி, தெய்வானை திருக்கல்யாணமும், வெள்ளித் தேரோட்டமும் நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டத்தில் பக்தர்கள் கலந்துகொண்டு தேரை வடம் பிடித்து இழுத்து சுவாமியை வழி பட்டனர்.

 

 

 

 

 

 

 

விழாவின் நிறைவாக நேற்றிரவு பெரியநாயகியம்மன் கோயில் அருகேயுள்ள தெப்பக்கரையில் வள்ளி, தெய்வானை சமேத முத்துக்குமார சுவாமி சர்வ அலங்காரத்தில் எழுந்தருளினார். அங்கு சிறப்புப் பூஜைகள், அபிஷேக, ஆராதனைகள் நடந்தன. பின்னர் தெப்பத்தேரில் எழுந்த ருளி சுவாமி வலம் வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமியை வழிபட்டனர். இதைத்தொடர்ந்து இரவு 11 மணிக்கு தைப்பூசத் திருவிழாவின் நிறைவாக கொடியிறக்கம் செய்யப்பட்டது.

வாக்களிக்கலாம் வாங்க

'லிசா உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close