தமிழகத்தில் ஜூன் 13 வரை லேசான மழைக்கு வாய்ப்பு


சென்னை: சென்னை வானிலை ஆய்வுமைய இயக்குநர் பா.செந்தாமரைக் கண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

தமிழகத்தில் தென்மேற்குப் பருவமழை மிக தீவிரமாக உள்ளது. தென் இந்தியப் பகுதிகளின் மேல் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இன்று (ஜூன் 8)இடி, மின்னலுடன் மழை பெய்யும். நாளை முதல் வரும் 13-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தமிழகத்தில் சில இடங்களில் இன்று முதல் வரும் 11-ம் தேதி வரை 5 டிகிரி ஃபாரன்ஹீட் வரை வெப்பநிலை உயரவும் வாய்ப்பு உள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.