[X] Close

மதுரையில் பாஜக நூதன முயற்சி: மோடி கூட்டத்தில் பங்கேற்க வீடுவீடாக அழைப்பு


bjp-s-efforts-in-madurai

மதுரையில் பிரதமர் மோடி பங்கேற்கும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு 26-வது வார்டு பரசுராம்பட்டியில் வீடு வீடாகச் சென்று பொதுமக்களை அழைக்கும் பாஜகவினர்.

  • kamadenu
  • Posted: 25 Jan, 2019 12:28 pm
  • அ+ அ-

மதுரை தோப்பூர் அருகே அமைய உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக் கான அடிக்கல் நாட்டு விழா வரும் 27-ம் தேதி மண்டேலா நகரில் நடக்கிறது. இதில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று அடிக்கல் நாட்டுகிறார். முதல்வர் பழனிசாமி, மத்திய, மாநில அமைச்சர்கள், பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொள் கின்றனர்.

இவ்விழா நடைபெறும் இடத்துக்கு அருகிலேயே பாஜக பொதுக்கூட்டம் நடைபெற உள் ளது. இதில் பிரதமர் மோடி பேச உள்ளார். மதுரையில் பிரதமர் பங்கேற்கும் முதல் பொது நிகழ்ச்சி இது. மேலும் மக்களவைத் தேர்த லுக்கு முன்னதாக பிரதமர் பங்கேற் கும் முக்கிய கூட்டமாக இதை பாஜகவினர் கருதுகின்றனர்.

10 மக்களவைத் தொகுதிகள் சார்பில் 9 மாவட்டத்தினர் பங்கேற் கும் பொதுக்கூட்டம் என்பதால் அதிக அளவில் மக்களைத் திரட்ட பாஜகவினர் தீவிர களப் பணியாற்றி வருகின்றனர். வாகனங் களைப் பிடிப்பது, உணவு வழங்குவது, மக்களை அழைப்பது உட்பட பல்வேறு விஷயங்களில் திராவிடக் கட்சிகளுக்கு நிகராகப் பணியாற்றி வருகின்றனர்.

ரூ.2.10 லட்சம் மானியத்தில் வீடு, இலவச எரிவாயு, ரூ.5 லட்சத் தில் காப்பீடு என மத்திய அரசின் திட்டங்களில் பலனடைந்தவர்களை வீடு,வீடாகத் தேடிச் சென்று அழைக்கின்றனர்.

இதுகுறித்து பாஜக நிர்வாகி ருவர் கூறியதாவது:

ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கும் தலா 32 பேர் உறுப்பினர்களாக உள் ளனர். இதன் பொறுப்பாளர் சக்தி கேந்திரா என அழைக்கப்படுகிறார். 5 வாக்குச்சாவடிகளுக்கான பொறுப்பாளர் மகா சக்தி கேந்திரா என அழைக்கப்படுகிறார். 10 வார்டுகள் வரை இடம் பெறும் ஒரு மண்டலத்தின் நிர்வாகி மண்டல் தலைவர் என அழைக்கப்படுகிறார்.

மண்டலத்துக்கு 3 ஆயிரம் பேர்

ஒரு மண்டலத்துக்கு 2,500 முதல் 3 ஆயிரம் பேரை கூட்டத் துக்கு அழைத்துச் செல்ல இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஒரு வாக்குச்சாவடிக்கு ஒரு வேன் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. காலை, மதிய உணவும், வாகன ஏற்பாடும் கட்சித் தலைமையே செய்துவிடுகிறது. மதுரை மாநகரில் இருந்து 30 ஆயிரம், புறநகரில் இருந்து 40 ஆயிரம் பேரை பங்கேற்கச் செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது. இதே பாணியில் 9 மாவட்டங்களிலும் பணிகள் நடைபெறுகின்றன.

மதுரை நகர் முழுவதும் 2 நாட்களாக ஆட்டோவில் ஒலிபெருக்கி பிரச்சாரம் நடந்து வருகிறது. வீடு வீடாகப் பிரசுரங் களை வழங்கி அழைக்கிறோம். நாங்கள் எதிர்பார்த்ததைவிட மக்களிடம் நல்ல வரவேற்பு உள்ளது. பொதுமக்களின் ஆர்வத் துக்கு ஏற்ப எவ்வளவு பேரை வேண்டுமானாலும் அழைத்து வரலாம் எனக் கட்சி நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

இதில், திராவிடக் கட்சியினரைப் போல் செயல்பட்டாலும், யாருக்கும் பணம் வழங்கி அழைத்து வரவே கூடாது என்பதில் தீர்மானமாக உள்ளோம். ரூ.12 செலுத்தி ரூ.2 லட்சத்துக்கு காப்பீடு, ரூ.200 செலுத்தி செல்வமகள் திட்டத்தில் சேர்ப்பது போன்ற பயனுள்ள திட்டங்களை செய்து தந்து மக்களின் ஆதரவைப் பெறுங்கள் எனத் தெரிவித்துள்ளனர். அதன்படி செயல்படுகிறோம்.

இதுவரை மதுரையில் நடந்த பொதுக்கூட்டத்திலேயே நரேந்திர மோடி பங்கேற்கும் இந்தக் கூட்டம்தான் அரசியல் வரலாற்றில் பெரும் திருப்புமுனையை ஏற்படுத்தும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

வாக்களிக்கலாம் வாங்க

'லிசா உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close