மாநில கட்சி அங்கீகாரம் பெற்றுள்ள விசிக, நாம் தமிழர் கட்சிக்கு நடிகர் விஜய் வாழ்த்து


சென்னை: நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் கணிசமான வாக்குசதவீதத்தைப் பெற்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியும், நாம் தமிழர் கட்சியும் மாநில கட்சிகள் என்ற அங்கீகாரத்தைப் பெற்றுள்ளன. இந்நிலையில் 2 கட்சிகளுக்கும் தமிழக வெற்றிக் கழக தலைவர் நடிகர் விஜய் வாழ்த்து தெரிவித் துள்ளார்.

இதுகுறித்து எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:

மக்களின் நம்பிக்கையை பெற்று... நடைபெற்று முடிந்த மக்கள வைத் தேர்தலில் மக்களின் நம்பிக்கையைப் பெற்று, மாநிலக் கட்சிகளாக அங்கீகாரம் பெறும் தகுதியை வென்றெடுத்துள்ள விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கும், நாம் தமிழர் கட்சிக்கும் எனது பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

மேலும் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இருந்து உறுப்பினர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அனைவருக்கும் தங்கள் பணி சிறக்க வாழ்த்துகள்” என தெரிவித்துள்ளார்.