[X] Close

மக்களவை தேர்தலுக்கான கூட்டணியை நானே முடிவு செய்வேன்: ஊடகங்களுக்கு ராமதாஸ் பதிலடி


ramadoss-on-ls-alliance

  • பாரதி ஆனந்த்
  • Posted: 22 Jan, 2019 12:39 pm
  • அ+ அ-

மக்களவை தேர்தலுக்கான கூட்டணியை நானே முடிவு செய்வேன்; து ஊடகங்கள் கற்பனை குதிரையில் சவாரி செய்து உண்மையற்ற செய்திகளை வெளியிடுவதை தவிர்க்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியிருக்கிறார்.

மக்களவைத் தேர்தல் இன்னும் சில நாட்களில் நடைபெறவுள்ள நிலையில் தமிழக அரசியல் கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி சேரும் என்ற எதிர்பார்ப்பும் மிகுந்துள்ளது.

இந்நிலையில் ஊடகங்களில் பாமக கூட்டணி குறித்து பல்வேறு தகவல்களும் வெளிவரவதாக சுட்டிக்காட்டிய ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில், "மக்களவைத் தேர்தலுக்கான பாமகவின் கூட்டணி குறித்து ஊடகங்கள் கற்பனை குதிரையில் சவாரி செய்து உண்மையற்ற செய்திகளை வெளியிடுவதை தவிர்க்க வேண்டும். கூட்டணியை தீர்மானிக்கும் அதிகாரம் எனக்கு வழங்கப்பட்டுள்ளது. நான் இன்னும் முடிவெடுக்கவில்லை. முடிவு  எடுத்தவுடன் அதை வெளிப்படையாக அறிவிப்பேன்!" எனப் பதிவிட்டிருக்கிறார்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close