[X] Close

40 மக்களவை தொகுதிகளிலும் அதிமுக வலுவாக உள்ளது- தம்பிதுரை பேட்டி


thambidurai-interview

  • kamadenu
  • Posted: 22 Jan, 2019 10:52 am
  • அ+ அ-

கிருஷ்ணகிரி

40 மக்களவை தொகுதிகளிலும் அதிமுக வலுவாக உள்ளது என கிருஷ்ணகிரியில் மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்தார்.

மக்களவை துணை சபாநாயகரும், அதிமுக கொள்கை பரப்பு செயலாளருமான மு.தம்பிதுரை கிருஷ்ணகிரியில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:

தமிழகம் முழுவதும் அதிமுக அரசுக்கு மக்களின் ஆதரவு வலுவாக உள்ளது. மக்களவைத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. தற்போது வரையில் அதிமுக எந்த கட்சியுடனும் கூட்டணி அமைக்கவில்லை. தேர்தல் அறிவித்தவுடன் செயற்குழு கூடி, முதல்வர், துணை முதல்வர் முடிவு செய்வார்கள். 40 மக்களவைத் தொகுதிகளிலும் அதிமுக வலுவாக உள்ளது.

ஜிஎஸ்டி வேண்டாம் என அன்றைய முதல்வர் ஜெயலலிதா எதிர்த்தார். நாங்களும் எதிர்த்து வாக்களித்தோம். மத்திய அரசிடமிருந்து, தமிழகத்துக்கு பல்வேறு துறைகளில் இருந்து நிதி வரவேண்டி உள்ளது. ஜிஎஸ்டியில் தமிழகத்துக்கு வர வேண்டிய நிதி நிலுவையில் உள்ளது. நிலுவையில் உள்ள சுமார் ரூ.10 ஆயிரம் கோடி நிதியை தமிழகத்துக்கு மத்திய அரசு உடனே வழங்க வேண்டும்.

சஸ்பெண்ட் செய்யப்பட்ட அதிமுக மக்களவை உறுப்பினர்களை மீண்டும் அவையில் அனுமதிக்க வேண்டும் என நான் பேசியபோது, தேசிய கட்சிகள் கண்டு கொள்ளாமல் இருந்தது வியப்பாக உள்ளது. ஆனால் தேர்தல் வரும் நேரத்தில் மட்டும் தேசிய கட்சிகள் கூட்டணி பேச முன் வருவதாக தெரிவித்தார். இந்நிகழ்வின் பர்கூர் சட்டப்பேரவை உறுப்பினர் சி.வி.ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close