[X] Close

பொங்கல் பண்டிகையையொட்டி அனுமதியை தவறாக பயன்படுத்திய 236 ஆம்னி பேருந்துகளுக்கு அபராதம்: மண்டல போக்குவரத்து துறை நடவடிக்கை


omni-bus-penalty

  • kamadenu
  • Posted: 22 Jan, 2019 10:51 am
  • அ+ அ-

கோவை

அனுமதியை தவறாக பயன்படுத்தி பொங்கல் விடுமுறை நாட்களில் இயக்கப்பட்ட 236 ஆம்னி பேருந்து களுக்கு கோவை மண்டல போக்கு வரத்து துறை மூலம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

கோவை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பணிபுரியும் வெளிமாவட்டங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்கள் சொந்த ஊர்களுக்குச் சென்று திரும்பியுள்ளனர். பண்டிகை காலங்களில் ரயில்களில் டிக்கெட் கிடைக்காத வெளியூர் பயணிகள் ஆம்னி பேருந்துகளை நாடுவது வழக்கம். இதைப் பயன்படுத்தி ஆம்னி பேருந்துகள் விதிமீறலில் ஈடுபடுவது வாடிக்கையாகிவிட்டது. அவ்வாறு விதிமீறலில் ஈடுபடும் வாகனங்கள், ஆம்னி பேருந்து களை கண்காணிக்க போக்கு வரத்து துறை சார்பில் சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டிருந்தன. அந்த குழுவினர் கடந்த 11-ம் தேதி முதல் 21-ம் தேதி வரை கோவை மண்டலத்துக்குட்பட்ட திருப்பூர், மேட்டுப்பாளையம், தாராபுரம், உதகை உள்ளிட்ட இடங்களில் சோதனை மேற்கொண்டனர். இதில், பல ஆம்னி பேருந்துகள் விதிமீற லில் ஈடுபட்டுள்ளது தெரியவந்தது.

இதுதொடர்பாக கோவை மண்டல இணை போக்குவரத்து ஆணையர் கே.ஆர்.கிருஷ்ண மூர்த்தி கூறியதாவது: புதுச்சேரி, கேரளா, கர்நாடக மாநிலங்களில் பதிவு செய்யப்பட்ட படுக்கை வசதி கொண்ட ஆம்னி பேருந்துகள் அனைத்துக்குமே தமிழகத்துக்குள் பயணிகளை ஏற்றி, இயக்க அனுமதி வழங்கப்படவில்லை. அவை, குழுவாக உள்ளவர்களை வாடகை அடிப்படையில் ஓர் இடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு கொண்டு சென்றுவிடும் அனுமதியை மட்டுமே அந்தந்த மாநில அரசிடமிருந்து பெற்றுள்ளன.

தமிழகத்துக்குள் ஒரு குறிப்பிட்ட வழித்தடத்தில் ஆம்னி பேருந்து களை அவர்கள் இயக்கக்கூடாது. அவ்வாறு இயக்கினால் அபராதம் விதிக்கப்படுகிறது. ஆம்னி பேருந் தில் சரக்குகளை ஏற்றிச்செல்ல அனு மதி இல்லை. ஆனால், பார்சல் நிறுவனங்கள் மூலம் ஆம்னி பேருந்தில் சரக்குகளை அனுப்பு கின்றனர். இதனை கண்காணிக்க கோவை மண்டலத்தில் உள்ள 16 வட் டாரப் போக்குவரத்து அலுவலகங் கள் மூலம் குழுக்கள் அமைக்கப் பட்டிருந்தன. இதன்மூலம் சோத னைகள் நடத்தப்பட்டு, விதிமீற லில் ஈடுபட்ட 236 ஆம்னி பேருந்து களுக்கு மொத்தம் ரூ.5.67 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

ஒரு பேருந்துக்கு தலா ரூ.2,500 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதுதவிர, தமிழகத்துக்குள் இயங்குவதற்கான வரியை செலுத்தாத 3 ஆம்னி பேருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இதேபோல, அதிக பாரம் ஏற்றிச் சென்ற வாகனங்கள், ஆட்களை ஏற்றிச் சென்ற சரக்கு வாகனங்கள் என மொத்தம் 222 வாகனங்கள், சீட் பெல்ட் அணியாதது, தலைக்கவசம் அணியாமல் இயங்கியது உள்ளிட்ட காரணங்களுக்காக மொத்தம் 461 வாகனங்களுக்கு ரூ.7.26 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close