[X] Close

பெரிய தொட்டிகள் அகற்றம்; தரம் பிரித்து அளிப்பது கட்டாயம்: வணிக வளாக பகுதிகளில் இனி ‘டுவின் டஸ்பின்’; கோவை மாநகராட்சி நடவடிக்கை


dustbin-in-kovai

ஆர்.எஸ்.புரம் பகுதியில் வைக்கப்பட்டுள்ள ‘டுவின் டஸ்பின்’.படம்: ஜெ.மனோகரன்

  • kamadenu
  • Posted: 22 Jan, 2019 10:49 am
  • அ+ அ-

டி.ஜி.ரகுபதி

கோவை 

மாநகரில் வணிக வளாகங்கள், வர்த்தக மையங்கள் உள்ள பகுதி களில் வைக்கப்பட்டுள்ள பெரிய குப்பைத்தொட்டிகள் அகற்றப் பட்டு, ‘டுவின் டஸ்பின்’ வைக்கப் பட்டு வருகின்றன.

கோவை மாநகரின் 100 வார்டு களில் 3,500க்கும் மேற்பட்ட வீதிகள் உள்ளன. தினசரி சராசரியாக 950 டன் குப்பை சேகரிக்கப்பட்டு, வெள்ளலூர் குப்பைக் கிடங்குக்கு கொண்டு செல்லப்பட்டு கொட்டப் படுகின்றது. மாநகர் முழுவதும் 5 ஆயிரம் குப்பைத்தொட்டிகள் உள்ளன. இதில் வணிக வளாகங்கள் உள்ள பகுதிகளில் மட்டும் சுமார் 1,500 குப்பைத்தொட்டிகள் வைக்கப்பட்டுள்ளன.

தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் உத்தரவின்படி, வெள்ளலூர் குப்பைக் கிடங்குக்கு கொண்டு வரப்படும் குப்பை அளவை குறைக்க மாநகராட்சி நிர்வாகத்தின் சார்பில், 69 இடங்களில் இயற்கை உரம் தயாரிப்பு மையங்கள், 271 பூங்கா இடங்களில் தோட்டக்கழிவு மூலம் இயற்கை உரம் தயாரிப்பு மையங்கள் அமைக்க முடிவு செய் யப்பட்டு, அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. ஒவ் வொரு மையமும் குறைந்தபட்சம் ரூ.6 லட்சம் முதல் ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட உள்ளன. மாநகரின் வணிக வளாகங்கள், வர்த்தக மையங்கள் உள்ள பகுதிகளில் இருந்து மட்டும் தினசரி சராசரியாக 100 முதல் 120 டன் வரை குப்பை சேகரிக்கப்படுகின்றன.

இந்நிலையில், வணிக வளாகங்களில் வைக்கப்பட்டுள்ள குப்பைத்தொட்டிகளை மாநகராட்சி நிர்வாகம் அகற்றி வருகிறது. இதுகுறித்து மாநகராட்சி மண்டல துப்புரவு அலுவலர் கே.வி.திருமால் கூறியதாவது:

மாநகராட்சி ஆணையர் க.விஜயகார்த்திகேயன் உத்தரவின் பேரில் மாநகரில் மக்கும், மக்காத குப்பை என தரம் பிரித்து குப்பை சேகரிப்பை தீவிரப்படுத்தும் வகை யில், வர்த்தக மையங்கள், வணிக வளாகங்கள் அதிகம் உள்ள ஆர்.எஸ்.புரம், கிராஸ்கட் சாலை, காந்தி புரம், ராஜவீதி மற்றும் அவிநாசி சாலை, சத்தி சாலை, மேட்டுப்பாளை யம் சாலைகளில் உள்ள 2 டன், ஒரு டன், 0.50 டன் குப்பைத் தொட்டிகள் மாநகராட்சியால் கடந்த சில தினங் களாக அகற்றப்பட்டு வருகின்றன.

அந்தப் பகுதிகளில் துப்புரவு தொழிலாளர்கள் மூலம் ‘டோர்-டு-டோர்’ எனப்படும், ஒவ்வொரு நிறுவனமாக சென்று குப்பை தரம் பிரித்து சேகரிக்கப்படுகிறது. இதனால் வணிக நிறுவனத்தினர் கட்டாயம் குப்பையைத் தரம் பிரித்து தான் அளிக்க வேண்டும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், வர்த்தக மையங்கள், வணிக வளாகங்கள் உள்ள பகுதிகளில் நடந்து செல்லும் பொதுமக்கள் குப்பை போட பச்சை மற்றும் நீல வண்ணத்தால் ஆன 2 குப்பைத் தொட்டிகள் (டுவின் டஸ்பின்) ஒவ்வொரு 200 மீட்டர் தூரத்துக்கு இடையேயும் வைக்கப்பட்டு வருகின்றன. பச்சை வண்ணத்தொட்டியில் மக்கும் குப்பை, நீல வண்ணத் தொட்டியில் மக்காத குப்பை கொட்ட வேண்டும். இதில் வணிக நிறுவனத்தினர் குப்பை கொட்டக்கூடாது. மத்திய அரசின் தூய்மை பாரதம் திட்டத்தின் கீழ் நிதியுதவி பெற்று இந்த தொட்டிகள் வைக்கப்படுகின்றன.

ஒரு ஜோடி குப்பைத் தொட்டி யின் விலை ரூ.8,500 ஆகும். தேர்வு செய்யப்பட்ட ஒப்பந்த நிறுவனத்தின் மூலம் இந்த குப்பைத்தொட்டிகள் வாங்கப்பட்டு கடந்த சனிக்கிழமை முதல் வர்த்தக மையங்கள், வணிக வளாகங்கள் அதிகளவில் உள்ள இடங்களில் வைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இவ்வாறு அவர் கூறினார்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close