[X] Close

கொதிக்கும் எண்ணெய்யில் கைகளை விட்டு வடைசுட்டு நேர்த்தி கடன் செலுத்திய பக்தர்கள்


vadai-prayer

கொதிக்கும் எண்ணெய்யில் கைகளை விட்டு வடை சுட்ட பக்தர்கள்.

  • kamadenu
  • Posted: 22 Jan, 2019 10:38 am
  • அ+ அ-

செங்கம்

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த தொரப்பாடி கிராமத்தில் உள்ள பாலமுருகன் கோயிலில் 23-ம் ஆண்டு தைப்பூச விழா நேற்று நடைபெற்றது.

இதையொட்டி, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, மகா தீபாராதனை நடந்தது. இதையடுத்து தீ மிதித்தல், காவடி எடுத்தல், பக்தர்களின் மார்பு மீது உரல் வைத்து மஞ்சள் இடித்தல், முள்மிதிப்பு, அலகு பூண்டுதல் போன்றவற்றை செய்து பக்தர்கள் வேண்டுதலை நிறைவேற்றினர்.

அதன்பின்னர், கொதிக்கும் எண்ணெய்யில் கைகளை விட்டு வடை சூட்டு பக்தர்கள் நேர்த்திக் கடன் செலுத்தினர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.

வாக்களிக்கலாம் வாங்க

'கேம் ஓவர் ' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close