[X] Close

நாடு காப்பாற்றப்பட மோடி மீண்டும் ஆட்சிக்கு வரவேண்டும்: தமிழிசை சவுந்தரராஜன் வலியுறுத்தல்


modi-must-come-to-power-to-save-the-country

  • kamadenu
  • Posted: 21 Jan, 2019 12:28 pm
  • அ+ அ-

நாடு காப்பாற்றப்பட மோடி மீண்டும் ஆட்சிக்கு வரவேண்டும் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.

திருப்பூர் வடக்கு மாவட்ட பாஜக சார்பில் மாற்றுக்கட்சியினர் பாஜகவில் இணையும் விழா திருப்பூரில் நேற்று நடைபெற்றது. மாவட்ட தலைவர் ஆர்.சின்னசாமி தலைமை வகித்தார். கோட்ட இணை பொறுப்பாளர் என்.பாயிண்ட் மணி முன்னிலை வகித்தார்.

சிறப்பு விருந்தினராக தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கலந்து கொண்டார். அவரது முன்னிலையில் நடிகர் அஜித் ரசிகர்கள், வெவ்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்தோர் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கட்சியில் இணைந்தனர்.

விழாவில் தமிழிசை சவுந்தரராஜன் பேசியதாவது: சென்னை லயோலா கல்லூரியில் நடைபெற்ற ஓவியக் கண்காட்சியில் ‘மீ டூ’ (நானும் தான்) என குறிப்பிட்டு பாரத மாதா படத்தை வைத்துள்ளனர். இன்னொரு மதத்தை கேவலப்படுத்துவது தான் மதச்சார்பின்மையா? இதுபோன்ற நிகழ்ச்சியை நடத்தியதற்கு கல்லூரி நிர்வாகம் பதில் சொல்ல வேண்டும்.

இல்லையெனில் மிகப்பெரும் போராட்டத்தை நடத்துவோம். மேற்குவங்கத்தில் பாஜகவுக்கு எதிராக கூடியவர்கள் நாட்டிற்காக உழைப்பவர்களா? நாடு காப்பாற்றப்பட மோடி மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டும். அப்போது தான் பாஜகவால் மேற்கொள்ளப்பட்ட பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகளின் பலன்களை அனுபவிக்க முடியும். பிரதமர் மோடியின் தமிழக வருகை இன்னும் உறுதியாகவில்லை. உறுதியானால் திருப்பூரிலேயே நிகழ்ச்சி நடைபெறும்.

இவ்வாறு அவர் பேசினார்.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close