பத்திரிகையாளர் நல வாரியம் அமைக்கப்படும்


‘பத்திரிகையாளர்களின் நலன்களைக் கவனிக்க பத்திரிகையாளர் நலவாரியம் அமைக்கப்படும்’ என தமிழக அரசு அறிவித்துள்ளது.

சட்டப்பேரவையில், இன்று நடந்த செய்தித் துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் பேசிய செய்தித் துறை அமைச்சர் சாமிநாதன், தமிழகத்தில் பத்திரிகையாளர் நலன் காக்கும் விதமாக பத்திரிகையாளர் நல வாரியம் அமைக்கப்படும் என அறிவித்தார். பணிக் காலத்தில் இறக்கும் பத்திரிகையாளர்களுக்கான குடும்ப நிதி உதவி ரூ.3 லட்சத்தில் இருந்து ரூ.5 லட்சமாக உயர்த்தப்படும் என்றும், இளம் பத்திரிகையாளர்கள் உயர்கல்வி படிக்க அரசு நிதியுதவி வழங்கப்படும் என்றும் அறிவித்த அமைச்சர், முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமுக்கு அண்ணா பல்கலைக்கழக வளாகத்திலும், ரவீந்திர நாத் தாகூருக்கு ராணி மேரி கல்லூரி வளாகத்திலும் சிலைகள் அமைக்கப்படும் என்ற அறிவிப்பையும் வெளியிட்டார்.

x