[X] Close

இரட்டை பதிவுகளை நீக்கும் பணி தொடர்கிறது: ஜன. 31-ல் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு


vote

  • kamadenu
  • Posted: 19 Jan, 2019 16:31 pm
  • அ+ அ-

இரட்டை பதிவுகளை முழுமையாக நீக்கும் பணிகள் நடப்பதால் இறுதிவாக்காளர் பட்டியல் ஜன.31-ல் வெளியிடப்படும் என தேர்தல்ஆணையம் தெரிவித்துள்ளது.

தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி, கடந்த ஆண்டு செப்டம்பர் 1 முதல் அக்டோபர் 31-ம் தேதி வரை வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல், முகவரி மாற்றம் உள்ளிட்டவற்றுக்கு அக்.31-ம் தேதி வரை விண்ணப்பங்கள் பெறப்பட்டன. பின்னர், விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு, கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

இதைத் தொடர்ந்து, ஜன.4-ம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படுவதாக இருந்தது. ஆனால், ‘கஜா’ புயல் தாக்கியதில் 12 மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டதால் கள ஆய்வுப் பணிகள் பாதிக்கப்பட்டன. இதை யடுத்து, இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடும் தேதி தமிழகத்தில் தள்ளிவைக்கப்பட்டு, ஜன.21-ம் தேதி வெளியாகும் என தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யப்பிரத சாஹூ அறிவித்திருந்தார்.

ஆனா்ல் பெரும்பாலான மாவட்டங்களில் பணிகள் இன்னும் நிறைவடையவில்லை என கூறப்படுகிறது. வாக்காளர் பட்டியலில் இரட்டைப் பதிவுகளை நீக்கும் பணிகள் தொடர்ந்து நடப்பதால் இறுதி வாக்காளர் பட்டியல் 21-ம் தேதிக்கு பதில் 31-ம் தேதி வெளியிடப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யப்பிரத சாஹூ வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘வாக்காளர் பட்டியலில் உள்ள தவறுகள், இரட்டை பதிவுகளை கண்டறிந்து, கள விசாரணை மேற்கொண்டு அவற்றை நீக்கி, தேர்தல் ஆணையத்தின்,‘இஆர்ஓ நெட்’ (ERO net)என்ற மென்பொருள் மூலம் அச்சிடும் பணியை மேற்கொள்ளவேண்டும் என தேர்தல் ஆணையம்அறிவுறுத்தியுள்ளது. இதற்கு கால அவகாசம் தேவைப்படும் என்பதால் ஜன.31-ம் தேதி இறுதிவாக்காளர் பட்டியலை வெளியிடதேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. இதையடுத்து தமிழகம்முழுவதும் ஜன.31-ம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும்’ என தெரிவித்துள்ளார்

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close