[X] Close

திருப்பூர் ஜெய்வாபாய் மாநகராட்சிப் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் வீணாகும் விலையில்லா மிதிவண்டிகள்


tamilnadu-governmanet-free-cycles

திருப்பூர் ஜெய்வாபாய் மாநகராட்சிப் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் தூசி படிந்த நிலையில் காணப்படும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மிதிவண்டிகள். படம்: இரா.கார்த்திகேயன்

  • kamadenu
  • Posted: 18 Jan, 2019 10:55 am
  • அ+ அ-

இரா.கார்த்திகேயன்

திருப்பூர் 

திருப்பூர் ஜெய்வாபாய் மாநகராட்சிப் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகள் பல வாரங்களாக நிறுத்தி வைக்கப் பட்டிருப்பதால் அவை தூசுபடிந்து துருப்பிடிக்கும் நிலையை எட்டி உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது தொடர்பாக சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:

திருப்பூர் ஜெய்வாபாய் மாநகராட்சிப் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 6-ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை ஆயிரக்கணக்கான மாணவியர் படித்து வருகின்றனர். இதில் பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்புகளில் மட்டும் 2420 பேர் படிக்கின்றனர். இவர்களுக்கு தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை சார்பில் வழங்கப்படும் விலையில்லா மிதிவண்டிகள் பள்ளி வளாகத்தில் உள்ள கலையரங்கப் பகுதியில் பூட்டி நிறுத்தப்பட்டுள்ளன.

கடந்த பல வாரங்களாக அவை நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதால், தூசு படிந்து சிதிலம் அடையத் தொடங்கி உள்ளன. தற்போது பனிக்காலம் என்பதால் காற்றில் உள்ள ஈரப்பதம், மிதிவண்டியின் மீது படும்போது அவை துருப்பிடிக்கத் தொடங்கிவிடும்.

தற்போது மிதிவண்டி இல்லாததால் குழந்தைகள் பலர் பள்ளிக்கு பேருந்துகளிலும், நடந்தும் வந்து செல்லும் நிலை ஏற்படுகிறது. ஆகவே, உடனடியாக மிதிவண்டிகளை மாணவிகளுக்கு விநியோகம் செய்ய வேண்டும். கடந்த ஆண்டு எஞ்சியிருந்த 100-க்கும் மேற்பட்ட மிதிவண்டிகள் வளாகத்துக்குள்ளேயே நிறுத்தி வைக்கப்பட்டதால் அவற்றில் பல பழுதாகிவிட்டன. அவற்றையும் நன்கு சரிசெய்து வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

21-ம் தேதி விநியோகம்

ஜெய்வாபாய் பள்ளி தலைமை ஆசிரியை ஸ்டெல்லா கூறும்போது, ‘மேல்நிலைப் பிரிவில் 2420 மாணவிகள் படித்து வருகின்றனர். அவர்களுக்கு வழங்குவதற்கு மிதிவண்டி உதிரிபாகங்களை இணைக்கும் பணி நடந்தது. அதில் தற்போது 80 சதவீத பணிகள் நிறைவடைந்துள்ளன. பணி முழுமையாக நிறைவடைந்ததும், தூசு படிந்த மிதிவண்டிகள் சுத்தம் செய்யப்பட்டும், தேவை இருப்பின் செப்பனிட்டும் வரும் 21-ம் தேதி முதல் விநியோகம் செய்யும் பணியை தொடங்கிவிடுவோம் என்றார்.

வாக்களிக்கலாம் வாங்க

'மிஸ்டர் லோக்கல்' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close