[X] Close

பாஜகவுடன் கூட்டணி; குருமூர்த்தி விரும்பினால் போதாது, நாங்களும் விரும்பவேண்டும்: ஜெயக்குமார்


  • முத்தலீப்
  • Posted: 17 Jan, 2019 15:33 pm
  • அ+ அ-

அமைச்சர் ஜெயக்குமார் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது பாஜகவுடன் அதிமுக கூட்டணி குறித்து குருமூர்த்தி பேசியது குறித்து கேட்டபோது அவர் அளித்த பதில்

குருமூர்த்தி பாஜக தமிழகத்தில் காலூன்ற அதிமுகவுடன் கூட்டணி அமைக்கவேண்டும் என்று தெரிவித்துள்ளாரே?

அவர் ஒரு பத்திரிகையாளராக இருந்துக்கொண்டு ஒரு கருத்தை கூறியுள்ளார். அது அவரது ஆசையாகக்கூட இருக்கலாம். அதுகுறித்து நான் ஒன்றும் சொல்ல முடியாது.

கூட்டணி குறித்து பாஜக விரும்பினாலும், கூட்டணி என்பது குறித்து நாங்களும் விரும்பவேண்டும். அதுதான் முக்கியம். ஆகவே விருப்பம் முக்கியம். கூட்டணி குறித்து ஒருமித்த கருத்து முக்கியம். அதுகுறித்து முதல்வர், துணை முதல்வர் கட்சியின் அனைத்து மட்ட நிர்வாகிகளும் கலந்தாலோசித்து முடிவெடுக்கவேண்டும். ஆகவே கூட்டணி அந்த நேரத்தில் முடிவெடுக்க வேண்டிய ஒன்று.

பொதுக்குழு இதுவரை கூட்டப்படாமலே உள்ளதே?

ஆண்டுக்கொருமுறை பொதுக்குழு கூட்டுவோம்.

கடந்த ஆண்டு பொதுக்குழுவை கூட்டவே இல்லையே?

கூட்டுவோம், பொதுக்குழுவை கூட்டாமலே கட்சி நடத்துகிறவர்கள் உள்ளனர். நாங்கள் ஆண்டுக்கு ஒருமுறை இரண்டு மூன்றுமாத இடைவெளியில் கூட்டுவோம், என்று, எப்போது, எங்கே என்பது குறித்த அறிவிப்பு விரைவில் வரும்.

பொதுக்குழுவைக்கூட்டி அதில் கூட்டணி குறித்து ஜெயலலிதா அறிவிப்பது வழக்கம், இன்னும் பொதுக்குழுவை கூட்டவே இல்லையே?

தேர்தல் கூட்டணி தேர்தல் தேதி அறிவிக்கும்போது ஆயத்தப்பணிகள் இருக்கும். தேதி அறிவிக்கப்பட்டவுடன் ஆயத்தப்பணிகள், ஆய்வுப்பணிகள் போன்ற விருவிருப்பான காட்சிகள் இருக்கும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

 

 

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close