[X] Close

முதல்வர் மீதான ஸ்டாலின் குற்றச்சாட்டை மக்கள் நம்ப மாட்டார்கள்: அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கருத்து


people-do-not-believe-stalin-s-charges-against-the-chief-minister

  • kamadenu
  • Posted: 17 Jan, 2019 10:25 am
  • அ+ அ-

மதுரை

முதல்வர் பழனிசாமி மீது ஸ்டாலின் தெரிவிக்கும் குற்றச்சாட்டுகளை மக்கள் நம்ப மாட்டார்கள் என்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்தார்.

திருமங்கலம், கல்லுப்பட்டி, கள்ளிக்குடி ஒன்றியம் மற்றும் திருமங்கலம் நகராட்சி, பேரையூர் பேரூராட்சி பகுதிகளில் 1,12,661 குடும்பங்களுக்குப் பொங்கல் பரிசு வழங்கும் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் எஸ்.நடராஜன் தலைமையில் நடைபெற்றது. கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளர் ராஜேஷ் முன்னிலை வகித்தார். மாவட்ட வருவாய் அலுவலர் குணாளன் வரவேற்றார்.

பொங்கல் பரிசு வழங்கி அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசியதாவது:

திமுக சார்பில் மு.க.ஸ்டாலின் ஊராட்சி சபை கூட்டங்களை நடத்தி வருகிறார்.

அந்த கூட்டங்களில் மக்கள் கூட்டம் இல்லை. திமுகவினரை மட்டும் வைத்துக்கொண்டு மக்கள் வந்ததுபோல் ஸ்டாலின் பேசி வருகிறார்.

தமிழக முதல்வர், 2.01 கோடி குடும்பங்கள் பயனடையும் வகையில் பொங்கல் பரிசுடன் ரூ.ஆயிரம் பரிசு வழங்க உத்தரவிட்டார். இதற்காக ரூ.2,742 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. இந்த திட்டத்தால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

இதை தாங்க முடியாமல் கோடநாடு விவகாரத்தில் முதல்வர் மீது ஸ்டாலின் குற்றம்சாட்டி ஆளுநரிடம் மனு அளித்துள்ளார்.

ஸ்டாலின் எத்தனை பொய்யான குற்றச்சாட்டுகளை கூறினாலும் அதை மக்கள் நம்பப்போவதில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close