[X] Close

350 பவுன் நகை கொள்ளை வழக்கு; கும்பல் தலைவன் உட்பட மேலும் 3 பேர் பிடிபட்டனர்


350-gold-theft

  • kamadenu
  • Posted: 15 Jan, 2019 10:56 am
  • அ+ அ-

கோவை

கோவை அருகே 350 பவுன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில், கும்பல் தலைவன் உட்பட மேலும் 3 பேர் பிடிபட்டனர். அவர்களிடம் ரகசிய இடத்தில் தனிப்படை போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கல்யாண் ஜூவல்லர்ஸ் நிறுவனத்தின் கிளை கேரள மாநிலம் திருச்சூரில் செயல்பட்டு வருகிறது. இங்கிருந்து கோவையில் உள்ள கிளைக்கு கடந்த 7-ம் தேதி 350 பவுன் நகை மற்றும் 243 கிராம் வெள்ளி நகைகளை அந்நிறுவன ஊழியர்கள் அர்ஜூன் (22), வில்பிரட் (31) ஆகியோர் காரில் கொண்டு வந்தனர்.

கோவை நவக்கரை அருகே காரை வழிமறித்த மர்மநபர்கள் ஊழியர்களைத் தாக்கி விட்டு, 350 பவுன் நகை மற்றும் 243 கிராம் வெள்ளி நகைகளைக் கொள்ளையடித்து தப்பிச் சென்றனர்.

இது குறித்து க.க. சாவடி போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர். அதைத்தொடர்ந்து கொள்ளையர்களைப் பிடிக்க 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தேடுதல் வேட்டை நடைபெற்றது.

வேலூரைச் சேர்ந்த தமிழ்ச்செல்வன், ஜெயப்பிரகாஷ் ஆகியோர் சென்னை நீதிமன்றத்தில் சரணடைந்தனர். அவர்கள் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். வரும் 18-ம் தேதி அவர்கள் கோவை மத்திய சிறைக்கு மாற்றப்பட இருப்பதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் இவ்வழக்கில் தொடர்புடையதாக கடந்த 11-ம் தேதி 7 பேரை பிடித்து ரகசிய இடத்தில் வைத்து கோவை தனிப்படை போலீஸார் விசாரணை நடத்தினர். இக்கடத்தல் சம்பவத்துக்கு மூளையாக செயல்பட்டவர் பைரோஸ் என்பதும், கொள்ளையடிக்கப்பட்ட நகைகள் வைக்கப்பட்டுள்ள இடம் அவருக்கு தெரியும் என்பதும் விசாரணையில் தெரிந்தது.

செல்போன் சமிக்ஞை மூலம் பதுங்கியிருந்த இடத்தை நேற்று அதிகாலை கண்டுபிடித்து, பைரோஸ் உள்ளிட்ட 3 பேரை பிடித்தனர்.

பின்னர் அவர்களை கோவைக்கு அழைத்து வந்து ரகசிய இடத்தில் விசாரணை நடத்தி வருவதாக போலீஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close