[X] Close

கோடநாடு விவகாரத்தில் உச்ச நீதிமன்ற விசாரணை தேவை: டிடிவி தினகரன் வலியுறுத்தல்


kodanad-murder

  • kamadenu
  • Posted: 15 Jan, 2019 08:15 am
  • அ+ அ-

கோடநாடு கொலை விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்ற நீதிபதி விசாரணை நடத்த வேண்டுமென டிடிவி தினகரன் தருமபுரியில் தெரிவித்தார்.

அதிமுக முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினரும், தகுதி நீக்கம் செய்யப்பட்ட அரூர் சட் டப் பேரவை உறுப்பினரான அமமுக-வைச் சேர்ந்த ஆர்.ஆர்.முருகனின் தந்தையுமான ஆர்.ராஜமாணிக்கம் நேற்று உடல் நலக் குறைவால் உயிரிழந்தார். அவருக்கு அஞ்சலி செலுத்த அம முக துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் நேற்று அரூர் வந்தார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறியது:

கோடநாடு கொலை விவகாரத் தில் உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் நேரடி கண்காணிப்பில் விசாரணை நடக்க வேண்டும். அப்போது தான் முதல்வர் மீது உள்ள குற்றச்சாட் டில் உண்மை தெரிய வரும். கோட நாடு விவகாரத்தில் கைதாகி நிபந் தனை ஜாமீனில் உள்ள 2 பேர் குற்றம் சுமத்தினால், முதல்வர் ஏன் பயப்படுகிறார். எதற்காக அவர் களை தமிழக அரசு கைது செய்ய வேண்டும். இந்த விவகாரம் தொடர் பாக சிபிஐ உள்ளிட்ட எந்த அமைப்பு விசாரணை நடத்தினாலும், அது உச்ச நீதிமன்ற நீதிபதியின் நேரடி கண்காணிப்பில் நடைபெற வேண் டும். இவ்வாறு தெரிவித்தார்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close