[X] Close

ஐபிஎல் பார்க்காதீங்க.... காவிரி பிரச்சினையில் சர்வதேச கவனத்தை ஈர்க்க ஜேம்ஸ் வசந்தன் யோசனை


james-vasanthan-on-cauvery-issue

  • பாரதி ஆனந்த்
  • Posted: 04 Apr, 2018 11:13 am
  • அ+ அ-

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என ஆளுங் கட்சி உண்ணாவிரதம், எதிர்க்கட்சியினர் சாலை மறியல், மாணவர்கள் திடீர் முற்றுகைப் போராட்டம் எனப் பல்வேறு வகையிலும் தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடைபெற்றுவரும் நிலையில், இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் காவிரிப் பிரச்சினையில் சர்வதேச கவனத்தைப் பெற வித்தியாசமான யோசனைனைய முன்வைத்துள்ளார்.

"காவிரிப் பிரச்சனையில் நம் ஒற்றுமையை, எதிர்ப்புகளை பல விதங்களில், பல வழிகளில் காட்டிவருகிறோம். நான் ஒன்று சொல்கிறேன். சிலருக்கு சங்கடமாக இருக்கலாம். சிந்தித்து தீர்மானியுங்கள்.  

April 10-ம் தேதி CSK-வின் முதல் போட்டி. 50,000 கொள்ளளவு கொண்ட இந்த சேப்பாக்கம் ஸ்டேடியம் காலியாகத் தெரிந்தால் சர்வதேச கவனத்தை ஈர்க்கலாம். இந்தப் போட்டியை உலகம் முழுக்க டி.வி.யில் காண்பவர்களுக்குக் காரணம் தெரியவரும். நம் போராட்ட நோக்கம் ஒரே நாளில் எல்லா இடங்களுக்கும் காசு செலவில்லாமல் – ஒரு சின்ன தியாகத்தால், சென்று சேர்ந்துவிடும். 


ஒவ்வொரு வருடமும் ஜூன் மாதம் 12-ம் தேதி மேட்டூர் அணை திறக்கப்படும். இன்னும் 2 மாதங்களே இருக்கின்றன. இருக்கிற அரசியல் சூழ்நிலையில் (நீர் அளவை வைத்துத் திறந்த காலங்கள் போய்விட்டன) திறக்கப்படுமா, இந்தப் பிரச்சனை சுமுகமாக தீருமா, சுயநல அரசியல்வாதிப் பேய்கள் இதைத் தீர்க்கவிடுவார்களா என்பதெல்லாம் கேள்விக்குறியாகிப் போனபின்பு, இது மக்கள் பிரச்சனை, நம் பிரச்சனையாகி விட்டது. நாம்தான் இதைக் கையிலெடுத்துப் போராடி, அவர்களை இதற்கு தீர்வுகாண நிந்திக்க வேண்டும்"

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close