[X] Close

முதல்வர் மீதான குற்றச்சாட்டில் மிகப்பெரிய பின்னணி உள்ளது: அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேட்டி


rajendra-balaji-about-edappadi

  • kamadenu
  • Posted: 14 Jan, 2019 10:40 am
  • அ+ அ-

ராஜபாளையம்

முதல்வர் மீது குற்றம் சாட்டப்பட்டதில் மிகப்பெரிய பின்னணி இருக்கிறது என்று பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி கூறினார்.

இது குறித்து அவர் ராஜபாளையத்தில் செய்தியாளர் களிடம் கூறியதாவது:

ஆவின் பணியாளர்களுக்குச் சம்பளப் பாக்கி எதுவும் கிடையாது. பால் உற்பத்தியாளர்களுக்குப் பணம் விரைவாக வழங்கப்பட்டு விடும். நாங்கள் ஆளும் கட்சியாக இருப்பதால் திட்டங்களை அறிவித்துச் செயல்படுத்தி வருகிறோம். தேர்தல் வருவதால் மு.க. ஸ்டாலின் தனியாகக் கூட்டம் போட்டு நாடகம் நடத்தி வருகிறார்.

கொடநாடு பிரச்சினையில் விளம்பர நோக்குடன் முதல்வர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. கூலிப்படைத் தலைவன் கொடுத்த பேட்டியை வைத்து ஒரு அரசியல் தலைவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினால் நாட்டில் எந்த அரசியல் தலைவரும் நிம்மதியாக, பாதுகாப்பாக இருக்க முடியாது.

தமிழக முதல்வர் மீது குற்றம் சாட்டப்பட்டதில் மிகப்பெரிய பின்னணி இருக்கிறது. இந்த விவகாரம் தொடர்பாக முதல்வர் ஏற்கெனவே விளக்கம் அளித்துவிட்டார். இவ்வாறு அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி தெரிவித்தார்.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close